சுர்தி எருமை

சுர்தி எருமை (Surti) என்பது இந்தியாவின் குசராத் மாநிலத்தில் மாகி ஆறு மற்றும் சபர்மதி ஆறு ஆகியவற்றுக்கு இடையே காணப்படும் ஒரு எருமை இனம் ஆகும். இந்த இனத்தில் சிறந்தவை குஜராதின் ஆனந்து மாவட்டம், கேதா மாவட்டம், வடோதரா மாவட்டம் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன. [1]

இனம் பண்புகள் தொகு

சுர்தி எருமை நடுத்தர அளவு கொண்டதாகவும், அமைதியான குணமும் கொண்டது. இவற்றின் கழுத்து நீண்டும், கண்கள் நன்கு கவரும் வண்ணம் இருக்கும். கொம்புகள் அரிவாள் போன்று சிறிது நீளமாகவும், தட்டையாகவும் இருக்கும். இவ்வினங்கள் கறுப்பு (அ) காவி கலந்து இருக்கும். இதன் கால் தொடையில் இரண்டு வெள்ளை நிறப்பகுதி காணப்படுவது இதன் சிறப்பம்சம் ஆகும். இவற்றின் சராசரி பால் அளவு 1700 கி.கி ஆகும் இந்த எருமைகளின் முதல் கன்று ஈனும் வயது 45-47 மாதங்கள். அடுத்தடுத்த கன்றுகள் 400-500 நாட்கள் இடைவெளியில் ஈனும். இதன் காளைகள் எளிய வேலைகளுக்கு ஏற்றது.

இனத்தின் செயல்திறன் தொகு

சராசரி பால் உற்பத்தி: -

  • பால்சுரப்பு: -1500-1600 கிலோ
  • கொழுப்பு: - 7 முதல் 7.5%
  • SNF: - 9 9.15% ஆக
  • முதல் கன்று ஈனும் வயது: - 45 47 மாதங்கள்
  • கறவை கால இடைவெளி: - 400 க்கு 425 நாட்கள்
  • இனப்பெருக்க காலம்: - பருவகால (ஏப்ரல் செப்டம்பர்)

மேற்கோள்கள் தொகு

  1. Breed data sheet: Surti. Domestic Animal Diversity Information System of the Food and Agriculture Organization of the United Nations. Accessed September 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுர்தி_எருமை&oldid=2172024" இலிருந்து மீள்விக்கப்பட்டது