சுற்றுச்சூழலுடன் இணைந்த வேளாண்மை

சுற்றுச்சூழலுடன் இணைந்த வேளாண்மை (Agriculture in Concert with the Environment) (ACE) என்பது பூச்சிக்கொல்லிகள், கரையக்கூடிய உரங்கள் ஆகியவற்றால் ஏற்படும் மாசுபாட்டின் தீங்கைக் குறைக்கும் ஆராய்ச்சி திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக அமெரிக்க வேளாண் துறையின் பேணுதிற வேளாண்மை ஆராய்ச்சி, கல்வித் துறையுடன் (SARE) ஒத்துழைப்புடன் ஆளப்படும் ஒரு திட்டமாகும்.

தோற்றம்

தொகு

1991 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை(EPA) குறைந்த உள்ளீட்டுப் பேணுதிற வேளாண்மைத் திட்டத்தின் வழியாக அமெரிக்க வேளாண் துறையின் பேணுதிற வேளாண்மை ஆராய்ச்சி, கல்வித் துறையுடன் (SARE) கூட்டுசேர்ந்தது. திட்டத்திற்கு 1,000,000 டாலர் பாதீட்டை ஒதுக்கியது. எல்ஐஎஸ்ஏ திட்டம் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) டாலரிலிருந்து பெறப்பட்ட நிதியை டாலருக்கு டாலர் சரிப்படுத்துவதாக உறுதியளித்தது.[1]

திட்டப்பணி

தொகு

வேளாண் மாசுபாட்டைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் உதவும் வகையில் ஏ. சி. இ திட்டம் உருவாக்கப்பட்டது. இதை அடைய திட்டம் 3 முக்கிய இலக்குகளை உருவாக்கியது

  • வேளாண் நடைமுறைகளில் பூச்சிக்கொல்லிகள், உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல்
  • ஊட்டச்சத்து மேலாண்மை திட்டமிடல், குறைந்த தீங்குப் பூச்சிக்கொல்லிகள், உயிரியல் கட்டுப்பாடுகளின் பயன்பாட்டைச் செயல்படுத்த ஊக்குவித்தல்
  • சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட பகுதிகளைப் பாதுகாத்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. Madden, J. Patrick. "The Early Years". Sustainable Agriculture Research & Education. பார்க்கப்பட்ட நாள் 18 October 2015.