சுலோச்சனா டோங்ரே

சுலோச்சனபாய் தோங்ரே (Sulochana Dongre) என்றும் அழைக்கப்படும் சுலோச்சனாபாய் தோங்ரே ஓர் இந்திய சமூகஆர்வலரும், பெண்ணியவாதியுமாவார். தலித் சாதியைச் சேர்ந்த இவர், பிறப்பு கட்டுப்பாடு மற்றும் பெண் விடுதலைக்கான முக்கிய வழக்கறிஞராக இருந்தார்.[1]

சுலோச்சனபாய் தோங்ரே
பணிசமூக ஆர்வலர்

சுயசரிதைதொகு

1930 கள் மற்றும் 40 களில், தோங்ரே பெண் விடுதலையின் குறிப்பிடத்தக்க வழக்கறிஞராக ஆனார். ஆரம்பத்தில் அரசு சார்பற்ற அமைப்பான அகில இந்திய மகளிர் காங்கிரசுடன் இணைந்த இவர் - பிற தலித் தலைவர்களுடன் சேர்ந்து - உயர் சாதியினரால் பெரிதும் ஆதிக்கம் செலுத்துவதாக உணர்ந்து அங்கிருந்து விலகிவிட்டார். பின்னர், இவர் அகில இந்திய தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்கள் காங்கிரஸின் தலைவராவார். மேலும் 1942இல் காங்கிரசால் நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்.[2] அதே ஆண்டு, நாக்பூரில் நடந்த அகில இந்திய பட்டியல் சாதி கூட்டமைப்பு கூட்டத்தின் பெண்கள் மாநாட்டில் தோங்ரே (சாந்தாபாய் தானியுடன்) 25,000 பெண்கள் கூட்டத்தின் முன் பேசினார்.[3][4] இந்திய விடுதலைக்கு முன் உருவான கடைசி தலித் பெண்ணியக் குழுவான தலித் மஹிலா கூட்டமைப்புக்கும் தலைமை தாங்கினார்.[5]

குறிப்பிடத்தக்க வகையில், பிறப்பு கட்டுப்பாட்டுக்கு நாடு தழுவிய அணுகலை அழைத்த முதல் இந்தியத் தலைவர் தோங்ரே என்று சில ஆதாரங்கள் விவரிக்கின்றன. இது அவர் ஆதரித்த ஒரு நடவடிக்கையாகும்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மராத்திய எழுத்தாளர் ஊர்மிளா பவார் எழுதிய வீ ஆல்ஸோ மேட் ஹிஸ்டரி எனும் அம்பேத்கரிய இயக்கத்தில் பங்கேற்ற பெண்களை ஆவணப்படுத்தப்பட்ட நூலில் இவரது சுயசரிதையை எழுதியுள்ளார்.[6]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலோச்சனா_டோங்ரே&oldid=3358735" இருந்து மீள்விக்கப்பட்டது