சுல்கி நாலா
சுல்கி நாலா (Chulki Nala) என்பது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் பிதார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது பசவகல்யாண் வட்டத்தில் உள்ள சவுக்கிவாடியில் தொடங்குகிறது. இது 42 கி. மீ. தூரம் ஓடி பிதார் மாவட்டத்தில் உள்ள கரஞ்சா ஆற்றில் கலக்கிறது.[1] பீதர் மாவட்டத்தில் உள்ள பசவ கல்யாண வட்டத்தின் முசுதாபூர் கிராமத்திற்கு அருகில் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஒரு கூட்டு அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் 0.93 டிஎம்சி அடி நீர் இருப்பு செய்யலாம். இதனுடைய நீர்ப்பிடிப்பு பகுதி சுமார் 243.55 சதுர கிமீ ஆகும். இதன் மூலம் பசவகல்யாண நகருக்குக் குடிநீர் வழங்கப்படுகிறது.[2]
சுல்கி நாலா சுல்கி நாலா | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | பீதர் |
நகராட்சி | பசவகல்யாண் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | சொளகிவாதி பசவகல்யாண் பீதர் மாவட்டம் கர்நாடகம், இந்தியா |
முகத்துவாரம் | காரஞ்சா ஆறு |
⁃ அமைவு | கர்நாடகம், இந்தியா |
நீளம் | 42 km (26 mi) |