சுல்தானா கமால்

வங்காளதேச வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்

சுல்தானா கமால் (Sultana Kamal) வங்காளதேச வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். இவர் "ஐன் ஓ சலீஷ் கேந்திரா" என்ற குடிசார் உரிமைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.[1] [2] 2006-2008 வங்காளதேச அரசியல் நெருக்கடியின் போது குடியரசுத் தலைவர் இஜுதீன் அகமது தலைமையிலான வங்காளதேசத்தின் தற்காலிக அரசாங்கத்தில் ஆலோசகராக சிறுகாலம் பணியாற்றினார்.[3] பின்னர், கமால், மற்ற மூன்று ஆலோசகர்களுடன், தற்காலிக அரசாங்கத்திலிருந்து விலகினார்.[4] இவரது தாயார் சுஃபியா கமால் வங்காளதேச விடுதலைப் போரில் பங்கேற்றவர். 

சுல்தானா கமால்
தாய்மொழியில் பெயர்সুলতানা কামাল
பிறப்பு1950 (அகவை 73–74)
கல்விகலையில் முதுநிலைப் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்தாக்கா பல்கலைக்கழகம்
பணிமனித உரிமை ஆர்வல
வாழ்க்கைத்
துணை
சுப்ரியா சக்கரவர்த்தி
விருதுகள்ஜான் ஹம்ப்ரி சுதந்திர விருது, அனன்யா சிறந்த பத்து பேர் (1995)

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

தொகு

சுல்தானா, 195இல் கமால் உத்தீன் அகமது என்பவருக்கும், வங்காளதேசத்தைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரும், அரசியல் ஆர்வலருமான சுஃபியா கமாலுக்கும் பிறந்தார்.[5] முற்போக்கான இந்திய பெண் அரசியல்வாதியும் சீர்திருத்தவாதியுமான இலீலா நாக் அமைத்த டாக்கா மகளிர் குழுவில் இவர் சேர்ந்தார். இவர் ஆசிம்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஹோலி கிராஸ் கல்லூரியில்யிலும் தனது கல்வியைக் கற்றார். பின்னர், டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1978இல் இவர் சட்டப் பட்டத்தை முடித்தார். 1981 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் பெண்கள் மற்றும் வளர்ச்சிளை முடித்தார்.

தொழில்

தொகு

சுல்தானா, இசைக் கல்லூரியில் ஆசிரியையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், ஒரு புகையிலை நிறுவனத்தில் சேர்ந்தார். 1976இல் சில்ஹெட்டின் காதிம்நகரில் ஒரு சர்வதேச தன்னார்வ சேவையில் நுழைந்தார். 1990 வரை இவர் ஆங்காங்கின் வியட்நாமிய படகு மக்களுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1996ஆம் ஆண்டில், உரிமைகள் மற்றும் ஜனநாயகக் குழு என்ற கனடாவைச் சேர்ந்த மனித உரிமைகள் குழு வழங்கிய ஜான் ஹம்ப்ரி சுதந்திர விருதை வென்றார்.[6]

1971ஆம் ஆண்டில், இவர் முக்தி வாகினியில் சேர்ந்தார். சுதந்திரப் வங்காளதேச கள மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். விடுதலைப் போரில் சிறப்புப் பாராட்டைப் பெற்ற நான்கு பெண்களில் சுல்தானாவும் இவரது சகோதரி சயீதா ஆகிய இருவரும் அடங்குவர்.

சட்டப் பணிகள்

தொகு

இவர் சமூக, சட்ட, பாலின பிரச்சினைகள் குறித்து தினசரியிலும், பத்திரிகைகளில் எழுதுகிறார். மனோபிர் நிஷங்க மோன் என்ற பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த இவரது புத்தகம் ஆங்கிலத்தில் "ஹெர் அன்பியரிங் மைன்ட்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது சமீபத்திய வெளியீடுகளில் "மனபிதாகர், ராஷ்ட்ரா ஓ சமாஜ்" (மனித உரிமைகள், மாநிலமும் சமூகமும்), "சிலம் கோதை ஜெனோ நிலீமர்" போன்றவை கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகளாகும். ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, பசிபிக், ஐக்கிய நாடுகள் சபை, கனடா, ஐரோப்பா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மனித மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண இவர் பயணம் செய்தார்.

இலக்கியம்

தொகு

சுல்தானா, குழந்தைகள் அமைப்பான கச்சி கஞ்சர் மேளா, கலாச்சார குழுவன சங்கஸ்கிருதி சங்கசாத், கலாச்சார சுயாட்சிக் குழு, '69 வெகுஜன எழுச்சிக் குழு போன்ற பிற சமூக இயக்கங்களில் தீவிரமாக இருந்தார். இவர் பிரபல நாடகக் குழுவான "நாகோரிக் நாட்டிய சம்ப்ரோடே" என்பதின் நிறுவனர் உறுப்பினராக இருந்தா. மேலும், அதன் முந்தைய தயாரிப்புகளில் முன்னணி பாத்திரங்களில் நடித்தார்.

சொந்த வாழ்க்கை

தொகு

சுல்தானா சில்ஹெட்டில் உள்ள வழக்கறிஞரான சுப்ரியா சக்கரவர்த்தியை மணந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Members of Ain o Salish Kendra (ASK)". ASK Official site. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013.
  2. Banglapedia: National Encyclopedia of Bangladesh. Asiatic Society of Bangladesh.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Daily Sangram இம் மூலத்தில் இருந்து 21 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131221081146/http://www.dailysangram.com/news_details.php?news_id=96190. பார்த்த நாள்: 13 September 2012. 
  4. "No scope for work". http://www.thedailystar.net/2006/12/12/d6121201022.htm. பார்த்த நாள்: 2 March 2011. 
  5. "Settle Quaker Meeting". Archived from the original on 20 December 2013. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
  6. "John Humphrey Freedom Award 2009". Rights & Democracy. 2010. Archived from the original on 27 September 2011. பார்க்கப்பட்ட நாள் 11 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தானா_கமால்&oldid=3874453" இலிருந்து மீள்விக்கப்பட்டது