சுவசெரியா அவசர ஊர்தி சேவை
சுவசெரியா அவசர ஊர்தி சேவை (Suwa Seriya Ambulance Service) இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்குள்ளும் அவசர மருத்துவச் சூழ்நிலைகளுக்குப் பதிலளிப்பதற்காக அவசர ஊர்திகளை இயக்குகிறது. இலாப நோக்கமற்ற அமைப்பான சுவசெரியா அறக்கட்டளையின் இச்சேவை 1990 அவசர சேவை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு முழுவதும் 1990 தொலைபேசி அழைப்புகளுக்கு இந்த சேவை பதிலளிக்கிறது.
சுவசெரியா அவசர ஊர்தி சேவை Suwa Seriya Ambulance Service | |
---|---|
வகை | இலாப நோக்கற்ற அமைப்பு |
Region served | இலங்கை |
வலைத்தளம் | http://www.1990.lk/ |
மருத்துவமனைக்கு முந்தைய அவசரகால அவசர ஊர்தி சேவைக்கான துணை அமைச்சராக இருந்த அர்சா டி சில்வாவின் முன்மொழிவைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், இந்திய அரசாங்கம் வழங்கிய 7.56 மில்லியன் டாலர் மானியத்தில் சுவசெரியா அறக்கட்டளை நிறுவப்பட்டது. அப்போது இலங்கையில் மருத்துவமனைக்கு முந்தைய அவசரகால அவசர ஊர்தி சேவைக்கான பற்றாக்குறை இருந்தது. ஆரம்ப மானியம் முதலில் இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் 88 அவசர ஊர்திகள் கொண்ட மருத்துவச் சேவையைத் தொடங்க அனுமதித்தது. அடுத்த சில ஆண்டுகளில், 297 அவசர ஊர்திகள் கொண்டு தீவின் ஒன்பது மாகாணங்களுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. 15.09 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவிடமிருந்து கூடுதல் மானியத்துடன் டாடா மோட்டார்சு நிறுவனத்திடமிருந்து இந்த அவசர ஊர்திகள் வாங்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த சேவையை தேசியவாத குழுக்கள் மற்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்த்தது.[1]