சுவப்னா சஞ்சீவ் ஜோசி

சுவப்னா சஞ்சீவ் ஜோசி (Swapna Sanjiv Joshi-பிறப்பு 26 ஆகத்து 1959) இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள பம்பாய் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ஆவார்.[1] சக நீதிபதியான பிரிட்ஜ்கோபால் ஹரிகிஷன் லோயா, நாக்பூரில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு மர்மமான சூழ்நிலையில் இறந்ததை அடுத்து ஜோசி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.[2] ஜோசி, லோயாவின் மரணம் தொடர்பாக விசம் குடித்ததாகக் கூறப்படும் வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகினார்.[3][4]

வாழ்க்கை

தொகு

ஜோசி முதன்மையாக மகாராட்டிராவின் கோண்ந்தியாவில் கல்வி பயின்றார். இங்கு இவர் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் இளங்கலைச் சட்டம் பயின்றார்.[1]

நீதித்துறை வாழ்க்கை

தொகு

ஜோசி 1981-இல் வழக்கறிஞராகப் பதிவுசெய்தார். 1995-இல் மும்பையில் உள்ள நகரக் குடிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு கோந்தியாவில் பயிற்சி பெற்றார். 2004 மற்றும் 2005க்கு இடையில், அவர் 2008 வரை உரிமையியல் நீதிமன்றத்திற்குத் திரும்புவதற்கு முன்பு மும்பையில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2002, மகாராட்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களிலும், ஊழல் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களிலும் நீதிபதியாகப் பணியாற்றினார். 2008 முதல் 2011 வரை, இவர் மகாராட்டிராவின் சந்திராபூரில் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், 2011-2013 வரை மும்பையில் உள்ள நகரக் குடிமையியல் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதியாகவும் இருந்தார். 2013 முதல் 2016 வரை, இவர் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக 28 மார்ச் 2016 அன்று நியமிக்கப்படுவதற்கு முன்பு வரை, மகாராட்டிர சட்ட சேவைகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[1]

2010ஆம் ஆண்டில், ஜோசி, சந்திராப்பூரில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியபோது, நீதிபதியாகத் தனது செயல்பாடு குறித்து உள்ளூர் துணைக் கண்காணிப்பாளர் செரிங் டோர்ஜே கூறிய கருத்துகள் குறித்து பம்பாய் உயர் நீதிமன்றத்திற்குப் புகார்க் கடிதம் எழுதினார். மாவட்டத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பிடிஆணை தொடர்பான தொடர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜோசி கேட்டுக் கொண்டார். ஏனெனில் டோர்ஜே ஏற்கனவே இதுபோன்ற பல கூட்டங்களைத் தவறவிட்டதால் ஜோசி "மோசமாக" பேசியதாகக் கூறப்படுகிறது. டோர்ஜே பம்பாய் உயர் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டார். ஜோசியிடம் இவர் கூறிய கருத்துகள் குறித்து விசாரிக்கப்பட்டார்.[5][6]

நவம்பர் 2014-இல், ஜோசியின் சக நீதிபதியான பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா, நாக்பூரில் தனது மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு மர்மமான சூழ்நிலையில் இறந்தார்.[2][7] 2018ஆம் ஆண்டில், லோயா விசம் குடித்ததாகக் கூறப்பட்ட வழக்கை விசாரிப்பதிலிருந்து ஜோசி தன்னைத் தானே விலக்கிக்கொண்டார். [3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Swapna Sanjiv Joshi". Bombay High Court.
  2. 2.0 2.1 "Family Questions 'Suspicious Death' of Judge Who Heard Sohrabuddin Fake Encounter Case". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
  3. 3.0 3.1 Jain, Ritika (2018-11-28). "3 Bombay HC judges recuse themselves from case related to Judge Loya's death". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
  4. 4.0 4.1 "3 Bombay HC judges recuse from case". The Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
  5. "Cop gets contempt notice from HC". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
  6. Vyas, Hetal (2010-02-10). "Cop gets high court notice for deriding judge". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
  7. "Judge Loya death: Supreme Court order likely today". The Indian Express (in ஆங்கிலம்). 2018-04-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவப்னா_சஞ்சீவ்_ஜோசி&oldid=3905181" இலிருந்து மீள்விக்கப்பட்டது