கோந்தியா

கோந்தியா என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும். இது கோந்தியா மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் ஆகும். இப்பகுதியில் அரிசி ஆலைகள் ஏராளமாக இருப்பதால் கோந்தியா ரைஸ் சிட்டி என்றும் அழைக்கப்படுகின்றது.

கோந்தியா மத்திய பிரதேச மாநிலமான சத்தீஸ்கருக்கு மிக அருகில் உள்ளது. இது மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு நுழையும் நுழைவாயிலாக கருதப்படுகிறது. கோந்தியா நகராட்சி மன்றம் 1920 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த நேரத்தில் கோந்தியாவில் 20,000 மக்களுடன் 10 வார்டுகள் மட்டுமே இருந்தன. மேலும் நகராட்சி 7.5 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது 42 வார்டுகளும், மக்கட் தொகை ஏறத்தாழ 2 லட்சம் வரையிலும் காணப்படுகின்றது. நகரமயமாக்கலினால் அருகிலுள்ள கிராமங்களான குட்வா, கட்டாங்கி, புல்ச்சர், நாக்ரா, கரஞ்சா, முர்ரி, பிண்ட்கேப்பர் மற்றும் கமரி என்பனவும் இணைகின்றன. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் நகராட்சி மன்றத்தின் நகர அந்தஸ்தை வழங்க அருகிலுள்ள 20 கிராமங்களை கோண்டியாவில் இணைப்பதாக அறிவித்தது. இந்த நகரம் தேசிய நெடுஞ்சாலை 753 உடன் இணைக்கப்பட்டுள்ளது.

வரலாறுதொகு

மத்திய இந்தியாவின் பழங்குடியினரான கோண்டி மக்களின் பெயரால் இந்த நகரம் பெயரிடப்பட்டது. இது ஒரு கால கட்டத்தில் முகலாய சாம்ராஜ்யத்தால் ஆளப்பட்டது.

இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் போது 1876–78 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் நாக்பூரை சத்தீஸ்கர் ரயில் பாதை என்று அழைக்கப்படும் 150 கிலோமீட்டர் நீளமுள்ள (93 மைல்) ரயில் இணைப்பை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. இந்த ரயில்பாதை நாக்பூரை ராஜ்நந்த்கானுடன் இணைக்கிறது. இந்த பாதை 1888 டிசம்பரில் செயற்படத் தொடங்கியபோது கோந்தியா ரயில் நிலையம் உருவாக்கப்பட்டது. இந்த பாதையை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் 1887 ஆம் ஆண்டில் வங்காள நாக்பூர் ரயில் பாதை (பிஎன்ஆர்) உருவாக்கப்பட்டது. பின்னர் கோந்தியா-நைன்பூரின் முதல் பகுதி திறக்கப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் நைன்பூர்-கோந்தியா பாதை ஜபல்பூருக்கு நீட்டிக்கப்பட்டது. ரயில் இணைப்புக்களினால் கோந்தியாவின் வர்த்தகம் வளர்ச்சி கண்டது.[1]

பொருளாதாரம்தொகு

நகரத்தில் ஏராளமான அரிசி ஆலைகள் காணப்படுகின்றன. சில சிறிய அளவிலான புகையிலை தொழில்களும் நடைப் பெறுகின்றன.[சான்று தேவை]

போக்குவரத்துதொகு

மும்பை-நாக்பூர்-கொல்கத்தா சாலை கோந்தியா மாவட்டம் வழியாக செல்லும் ஒரே தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது மொத்தம் 99.37 கிமீ (62 மைல்) தூரத்தை உள்ளடக்கியது. விதர்பா பிராந்தியத்தின் நாக்பூரிலிருந்து சாலை வழியாக சுமார் 170 கி.மீ தொலைவில் கோந்தியா அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து சந்திரபூர், பண்டாரா, நாக்பூர் ஆகிய மாவட்டங்களுக்கான சாலை இணைப்புகள் காணப்படுகின்றன. நகரம் சாலைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நாக்பூரிலிருந்து மாநில போக்குவரத்து பேருந்து மூலம் கோந்தியாவை 4 மணி நேர பயணத்தில் அடையலாம். கோந்தியாவில் இருந்து ஜபல்பூர், நாக்பூர், ராய்ப்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களுக்கான பேருந்து இணைப்பு உள்ளது. கோந்தியா ரயில் நிலையம் மகாராஷ்டிராவின் ரயில் சந்திப்பாகும். இது ஒரு ஏ-தர நிலையம் ஆகும். இது ஹவுரா-மும்பை வழியில் அமைந்துள்ளது . இந்த நிலையத்தில் ஏழு நடைப் பாதைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் குடிநீர், தேநீர் கடைகள், இருக்கைகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் என்பன உள்ளன. இந்த நிலையத்தில் உயர் வகுப்புகளில் பயணிக்கும் பயணிகளுக்கு குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள் அமைந்துள்ளன.

கோண்டியாவுக்கான ரயில்வே மைல்கற்கள் பின்வருமாறு:

1888 - கோந்தியா ரயில் நிலையம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

1901 - சத்புரா எக்ஸ்பிரஸ் முதல் வகுப்பு சேவையைத் தொடங்கியது.

1903 - கோந்தியா-நைன்பூரின் முதல் பகுதி திறக்கப்பட்டது.

1905 - நைன்பூர்-கோந்தியா பாதை ஜபல்பூருக்கு நீட்டிக்கப்பட்டது.

1908 - கோண்டியா-நாக்பீர்-நாக்பூர் பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

1990-91 - பனியாஜோப்-கோந்தியா மற்றும் கோந்தியா-பண்டாரா சாலை பிரிவுகள் மின்மயமாக்கப்பட்டன.[2]

1999 - கோந்தியா-பால்ஹர்ஷா வரி திறக்கப்பட்டது.

2005 - கோந்தியா-பாலகாட் பிரிவு திறக்கப்பட்டது.

விமான சேவைதொகு

கோந்தியாவில் இருந்து 12 கி.மீ (7.5 மைல்) தொலைவில் உள்ள கம்தா கிராமத்திற்கு அருகில் கோந்தியா விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த வான்வழிப் பாதை 1940 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. [3]ஆரம்பத்தில் பொதுப்பணித் துறையால் நடத்தப்பட்டது. இது 1998 ஆம் ஆகத்து முதல் 2005 ஆம் ஆண்டு திசம்பர் வரை இது அரசுக்கு சொந்தமான மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் இயக்கப்பட்டது.[4] அதன் பிறகு இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏர்பஸ் ஏ -320 , போயிங் 737 போன்ற விமானங்களுக்கு இடமளிக்க விமான நிலையத்தின் ஓடுபாதை 2,300 மீட்டர் (7,500 அடி) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.[5]

சான்றுகள்தொகு

  1. "The Roaring Journey".
  2. "[IRFCA Electrification History from CORE]".
  3. "Statistics".
  4. "MIDC airports".
  5. Nov 21, Sachin Dravekar | TNN | Updated:. "Akola, Gondia next aviation hot spots | Nagpur News - Times of India" (en).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோந்தியா&oldid=2869977" இருந்து மீள்விக்கப்பட்டது