சுவரொட்டி பிரட்டல்
சுவரொட்டி கறி பிரட்டல், ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. குருதியில் இரும்புச்சத்து குறைந்தவர்களுக்கு இந்த ஆட்டு மண்ணீரல் எனப்படும் சுவரொட்டி கறி பிரட்டல் செய்து உண்டால் நன்மை பயக்கும்.[1]
தேவையான பொருட்கள்
தொகுஆட்டு சுவரொட்டி ஒன்று (250 கிராம்), சின்ன வெங்காயம் 100 கிராம் மற்றும் பச்சை மிளகாய் - 3
அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
தொகுதேங்காய்த்துண்டு 2, மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி மற்றும் சீரகத்தூள் அரைத் தேக்கரண்டி
செய்முறை
தொகுஅரைப்பதற்கு தேவையான பொருட்களை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். பின் ஆட்டு சுவரொட்டியை நன்றாக நீரில் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெயை சற்று தூக்கலாக விட்டு சூடானதும் சுத்தம் செய்த ஆட்டு சுவரொட்டியை கடாயில் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாயுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வேண்டும். சிறிது வாசம் வந்ததும் அரைத்த தேங்காய், மிளகு மற்றும் சீரக விழுதை சுவரொட்டியுடன் கலந்து பச்சை வாசம் போன பிறகு இறக்கி சூடு ஆறிய பின்னர் உண்ணலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சுவரொட்டி கறி பிரட்டல்". Archived from the original on 2019-10-28. பார்க்கப்பட்ட நாள் 2019-10-28.