சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை
சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை (Swarnajayanti Fellowship) என்பது இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (இந்தியா) ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆராய்ச்சி நிதி விருதாகும். இது இளம் ஆராய்ச்சியாளர்களின் குறிப்பிடத்தக்க மற்றும் சிறந்த ஆராய்ச்சிக்காக, உயிரியல், வேதியியல் , சுற்றுச்சூழல் அறிவியல், பொறியியல், கணிதம், மருத்துவம் . மற்றும் இயற்பியல் பிரிவுகளில் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தும் சிறந்த படைப்புகளை உருவாக்கும் நம்பிக்கைக்குரிய இளம் இந்தியக் கல்வியாளர்களை இந்த பரிசு அங்கீகரிக்கிறது.[1][2][3]
சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை Swarnajayanti Fellowship | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | அடிப்படை அறிவியல் ஆய்வு, இந்தியா |
வழங்குபவர் | அறிவியல் தொழில்நுட்பத்துறை இந்திய அரசு |
முதலில் வழங்கப்பட்டது | 1997 |
இணையதளம் | Swarnajayanti Fellowship Website |
விவரங்கள்
தொகு40 வயதுக்குட்பட்ட இந்தியக் குடிமக்கள் மற்றும் நிரூபிக்கப்பட்ட சாதனைப் பதிவைக் கொண்டவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.[4] மாதாந்திர ஆய்வு உதவித்தொகை ₹25,000 (US$310) (அத்துடன் ஆண்டுக்கு ₹5 இலட்சம் (US$6,300) ஆராய்ச்சி மானியமாக வழங்கப்படும். சுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இந்திய நிறுவனத்தில் பணியில் இருக்க வேண்டும்.[5]
பிரிவுகள்
தொகுசுவர்ணஜெயந்தி ஆய்வு உதவித் தொகை ஆறு பிரிவுகளின் கீழ் ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
- வேதியியல் அறிவியல்
- பூமி மற்றும் வளிமண்டல அறிவியல்
- பொறியியல் அறிவியல்
- கணித அறிவியல்
- உயிர் அறிவியல்
- இயற்பியல் அறிவியல்
பெற்றவர்கள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "14 Indian scientists get Swarna Jayanti Fellowship". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ "14 scientists awarded Swarna Jayanti Fellowships". newsonair.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ "Meet the winners of Swarnajayanti fellowship". 23 November 2018.
- ↑ "Swarnajayanti Fellowships Scheme". Department of Science and Technology (India).
- ↑ "Swarnajayanti Fellowships". www.serc-dst.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.