சுவர்ணவாகினி தொலைக்காட்சி (Swarnavahini) இலங்கையில் ஒளிபரப்பாகும் சிங்கள மொழித் தொலைக்காட்சிச் சேவையாகும். மார்ச்சு 16 1997இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை ஈஏபி எதிரிசிங்க நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது.[1][2][3] [3] இதன் சகோதர சேவையாக ஈ.டி.வி தொலைக்காட்சி ஆங்கில சேவையை வழங்குகின்றது. இது இலங்கையின் முதல் தனியாருக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாகும்.[4][4] ஈஏபி எதிரிசிங்க நிறுவனம் 1994ஆம் ஆண்டு தொடக்கம் ஈ.டி.வி -1 (E.T.V - 1) ஈ.டி.வி -2 (E.T.V - 2) என்ற ஆங்கில சேவைகளை ஆரம்பித்தது. அதில் ஒன்று 1997இல் சுவர்ணவாஹினி என்ற சிங்கள மொழி ஒளிபரப்பாக மாற்றம் அடைந்தது.[1]

சுவர்ணவாகினி
Typeஒளிபரப்பாக்கம்
Countryஇலங்கை
Availabilityதேசிய அளவில்
Ownerஈஏபி எதிரிசிங்க நிறுவனம்
Launch date
மார்ச்சு 16, 1997
Official website
http://www.swarnavahini.lk/

சுவர்ணவாகினி செய்திகள், விவரண நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள், சிறுவர் நிகழ்ச்சிகள், இசை, நிகழ்ச்சிகள் நாடகங்கள் எனப் பல்வேறுபட்ட சிங்கள மொழி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றது.[5][6][7] செய்திகள் சிங்கள மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. உள்நாட்டுத் தயாரிப்புகள் மூலம் சிங்கள மொழி பேசுபவர்களுக்கான தனியார் ஒளிபரப்புச் சேவையாக திகழ்கிறது.[8][9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "EAP Broadcasting Company Limited: Debenture Issue 2015" (PDF). Colombo Stock Exchange. p. 39.
  2. "EAP Broadcasting Company Limited: Debenture Issue 2015" (PDF). Colombo Stock Exchange. p. 38.
  3. 3.0 3.1 "EAP Broadcasting Company Limited: Debenture Issue 2015" (PDF). Colombo Stock Exchange. p. 4.
  4. 4.0 4.1 "Sri Lanka". Press Reference.
  5. "Channels". Dialog TV.
  6. "List of Channels on Dialog TV". TV Channels List.
  7. "Packs: Ntertainment". Dish TV (Sri Lanka).
  8. "List of Channels". Lanka Broadband Networks. Archived from the original on 20 March 2014.
  9. "Channel Lineup". PEO TV.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணவாஹினி&oldid=4129466" இலிருந்து மீள்விக்கப்பட்டது