சுவாதி சங்கீதோத்சவம்
சுவாதி சங்கீதோத்சவம் (Swathi Sangeethotsavam) (சுவாதி இசை விழா) என்பது மகாராஜா சுவாதித் திருநாளின் இசையமைப்பைக் கொண்டாடும் பத்து நாள் இசை விழாவாகும். மகாராஜா தனது பல படைப்புகளை இயற்றியதாக நம்பப்படும் திருவனந்தபுரத்திலுள்ள குதிரை மாளிகையில் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 4 முதல் 13 வரை திருவிழா நடத்தப்படுகிறது. இவ்விழா சுவாதி திருநாளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவரது இசையமைப்பிற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இசை விழாவிற்கு நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. தலைமையில் திருவிதாங்கூர் இராம வர்மன் மகாராஜா அறக்கட்டளையின் கீழ் இளவரசர் இராமவர்மன் இந்த விழாவை நடத்துகிறார். [1]
சுவாதி சங்கீதோத்சவம் | |
---|---|
இராம வர்மா சுவாதி சங்கீதோத்சவத்தில் நிகழ்ச்சி நடத்துகிறார். | |
நாள் | ஒவ்வொரு ஆண்டும் 4 சனவரி முதல் 13 சனவரி வரை |
அமைவிடம்(கள்) | திருவனந்தபுரம், இந்தியா |
வரலாறு
தொகுசுவாதித் திருநாளை முன்னிட்டு கேரள அரசு குதிரை மாளிகையில் விழாவை நடத்தி வந்தது. 1990களின் பிற்பகுதியில், கேரளா முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடத்த முடிவு செய்து, குதிரை மாளிகையில் திருவிழாவை நிறுத்தினர். பிறகு, கர்நாடக இசைக் கலைஞரும் சுவாதித் திருநாளின் நேரடி வழித்தோன்றலுமான இளவரசர் இராமவர்மா இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளார்.[2] [3]
இவற்றையும் பார்க்கவும்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Swathi Sangeethotsavam @ Kuthiramaika". swathithirunal.in. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
- ↑ "Royal musical treat". தி இந்து. 4 January 2008 இம் மூலத்தில் இருந்து 8 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080108141114/http://www.hindu.com/fr/2008/01/04/stories/2008010450030200.htm. பார்த்த நாள்: 21 October 2013.
- ↑ "The sound of music: Meet Rama Varma, the man behind Thiruvananthapuram's Swathi Festival". https://www.thenewsminute.com/article/sound-music-meet-rama-varma-man-behind-thiruvananthapurams-swathi-festival-94496.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் சுவாதி சங்கீதோத்சவம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.