சுவாதி சிங்
இந்தியப் பாரம் தூக்கும் வீராங்கனை
சுவாதி சிங் (Swati Singh) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள் பிறந்தார். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 53 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். போட்டியில் சிங் நான்காவது இட்த்தையே பிடித்தார் என்றாலும் தங்கப் பதக்கம் வென்ற நைசீரியாவைச் சேர்ந்த வெற்றியாளர் சிக்காஅமலாகா ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்த காரணத்தால் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது[1].
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 1987 அக்டோபர் 2 இந்தியா, உத்தரப் பிரதேசம், வாரணாசி |
உயரம் | 1.65 மீட்டர் (2014) |
எடை | 53 கிலோ கிராம் (2014) |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | பாரம் தூக்குதல் |
நிகழ்வு(கள்) | 53 கி.கி |
30 July 2014 இற்றைப்படுத்தியது. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Swati Singh wins bronze after Nigerian weightlifter fails dope test". Mid Day. பார்க்கப்பட்ட நாள் 30 July 2014.
புற இணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்