சுவாதி பிரமல்
சுவாதி பிரமல் (பிறப்பு சுவாதி ஷா 28 மார்ச் 1956) ஒரு இந்திய விஞ்ஞானி மற்றும் தொழிலதிபர் ஆவார், ஆரோக்கியம், பொது சுகாதாரம் மற்றும் புதுமைகளைப் புகுத்தல் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். அவர் பிரமல் எண்டர்பிரைசஸ் லிட்., நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளார். சுவாதி 1980 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். ஹார்வர்ட் பொது சுகாதாரப்பள்ளியின் முன்னாள் மாணவியாவார். அவர் அங்கு 1992இல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அவர் பிரமல் குழுமத்தைச் சேர்ந்த அஜய் பிரமலை மணந்தார்..[2]
சுவாதி பிரமல் | |
---|---|
பிறப்பு | 28 மார்ச்சு 1956 |
இருப்பிடம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் [[மும்பை பல்கலைக்கழகம் ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்]] |
பணி | துணைத்தலைவர், பிரமல் இன்டஸ்டிரிஸ் லிட். |
வாழ்க்கைத் துணை | அஜய் பிரமல் |
பிள்ளைகள் | ஆனந்த் பிரமல் [1] நந்தினி பிரமல் |
பொது சுகாதாரப் பணி
தொகுமும்பையில் உள்ள கோபிகிருஷ்ணா பிரமல் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார், மேலும் நாள்பட்ட நோய், ஆஸ்டியோபோரோசிஸ், மலேரியா, காசநோய், கால்-கை வலிப்பு மற்றும் போலியோ ஆகியவற்றுக்கு எதிராக பொது சுகாதார பிரச்சாரங்களைத் தொடங்கினார்.
மருத்துவமனையில் உள்ள விளையாட்டு-மருத்துவ மையம் முதன்முதலில் அமைந்த பெருமையை உடையதாகும். அம்மையமானது ஊனமுற்ற குழந்தைகள், முதியவர்கள் மற்றும் விளையாட்டு காயங்களுக்கு மூட்டுவலி சிகிச்சைக்காக பணியாற்றியது. ஆஸ்டாப் இந்தியா என்ற பெயரிலான ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்புத் திட்டத்தையும், நீரிழிவு நோயினைக் கண்டறிவதற்காகவும் கால்-கை வலிப்பு மற்றும் இந்தியாவில் நாள்பட்ட நோயைத் தடுப்பதற்காகவும் நாடு தழுவிய பிரச்சாரத்தின் அடிப்படையில் மேற்கொள்வதற்காகஒரு கள கண்டறிதல் மையம் ஆகியவற்றைத் தொடங்கினார். அவர் மருத்துவ ஊட்டச்சத்து பற்றி பல நூல்களையும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய நூலையும் எழுதியுள்ளார்.
பல்துறை சார்ந்த மற்றும் கள அடிப்படையிலான கல்வியில் ஈடுபட்டுள்ள பிரமல் அறக்கட்டளையின் இயக்குநர் என்ற நிலையில் பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். மொபைல் சுகாதார சேவையான எச்.எம்.ஆர்.ஐ - என்பதை கிராமப்புற இந்தியாவில் மேம்படுத்த பல உதவிகளைப் புரிந்துவருகிறார்.[3] பெண்கள் அதிகார மேம்பாடு தொடர்பான திட்டங்கள் மற்றும் இளம் தலைவர்களை உருவாக்குகின்ற சமூகக் கல்வித் திட்டத்திற்கு ஆதரவினை அளித்து வருகிறார். அந்த நிலையில் சுத்தமான தண்ணீருக்கான சர்வஜால் அறக்கட்டளையின் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். தலைமைப் பாத்திரங்களில் பெண்களை ஆதரிப்பதில் அவர் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார்.[4] உடல்நலம் தொடர்பான பொதுக் கொள்கையில் அவளது தாக்கம் நோய்களின் சுமையைக் குறைக்க உதவும் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுக்கும் வகையிலும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார். எட்டு முறை 25 சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அவர் பரிந்துரைக்கப்பட்டார், இப்போது மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் ஹால் ஆஃப் ஃபேமில் ஒரு பகுதியாக உள்ளார். அவர் பிரதமரின் அறிவியல் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார் மற்றும் பிரதமரின் வர்த்தக கவுன்சிலில் அவர் பணியாற்றினார் (2010 - 2014).[5]
அவர் தற்போது ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் மற்றும் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவரின்கீழ் உள்ள ஆலோசனைக் குழுவில் பணியாற்றுகிறார். அவர் சுகாதார, நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களில் வாரிய பதவிகளை வகித்து வருகின்றார். ஐ.ஐ.டி பம்பாய் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்ற இந்திய மற்றும் சர்வதேச கல்வி நிறுவனங்களின் வாரியங்களில் குழுப்பொறுப்பில் முக்கிய நிலையில் பணியாற்றுகிறார்.[6] அவர் உபென்னிலும் பணியாற்றியுள்ளார்.
பயனுள்ள பொதுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தினை அறிமுகப்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்குவதில் உதவி புரிந்துள்ளார். அந்த அமைப்பானது தனியார் மற்றும் பொது நிறுவனங்களை ஒன்றிணைந்து செயல்பட ஊக்குவிக்கும், அதற்கான மேலும் சுகாதார மற்றும் வணிகத்தில் உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும் , மற்றும் நிர்வாகத்திற்கான அடித்தளத்தை உருவாக்க அவர் உதவியுள்ளார். மேலும் அவர் வர்த்தகம், திட்டமிடல், சுற்றுச்சூழல், கலைகள், பெண்கள் தொழில்முனைவோர், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய மேம்பாட்டுக்கான அரசாங்க பொதுக் கொள்கைக் குழுக்களிலும் பல நிலைகளில் பணியாற்றுகிறார்.
டாக்டர் பிரமால் 2012 முதல் 2018 வரை 6 ஆண்டுகளாக மதிப்புமிக்க ஹார்வர்ட் மேற்பார்வையாளர் குழுவில் உறுப்பினராக இருந்து உள்ளார். அவர் 90 ஆண்டுகளில் இந்தியாவின் அப்பெக்ஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸின் முதல் பெண் தலைவர் என்ற நிலையில் பணியாற்றினார், மேலும் முக்கியமான பொதுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்தில் அவரது வலுவான செல்வாக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரக் கொள்கையில் 2006 முதல் 2014 வரை மாண்புமிகு பிரதமரின் ஆலோசகராக பணியாற்றிய பெருமை அவருக்கு கிடைத்தது.
விருதுகள் மற்றும் கௌரவங்கள்
தொகுபிரமலுக்கு ஏராளமான இந்திய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
- 2004-05 - பிஎம்ஏ மேலாண்மை பெண் சாதனையாளர் விருது [7]
- 2006 - பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக்கிடமிருந்துசெவாலியர் டி எல் ஆர்ட்ரே நேஷனல் டு மெரைட் (நைட் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மெரிட்) விருது.
- 2006 - இந்தியப் பிரதமரிடமிருந்து . அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் இளம் தலைவராக லக்னோ தேசிய தலைமை விருது.
- 2006 - பார்மா பயோடெக் தொழில்களில் சிறந்த பங்களிப்புகளுக்கான செம்டெக் பார்மா விருது
- 2007 - ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் சிறந்த பெண் சாதனையாளருக்கான ராஜீவ் காந்தி விருது
- 2010–2011 - அஸ்ஸோசாம் நிறுவனத்தின் தலைவர்.[8]
- 2010 - லண்டன் ஹில்டனில், இங்கிலாந்தில் உலகளாவிய அதிகார மேம்பாட்டு விருது
- 2012 - இந்திய ஜனாதிபதி திருமதி பிரதிபா படேலிடமிருந்து இந்தியாவின் உயர் குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, (180).[9]
- 2012 - ஹார்வர்டில் இருந்து முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த விருதான முன்னாள் மாணவர் மெரிட் விருது.[10]
- 2012 - நியூயார்க்கில் குழந்தைகள் நம்பிக்கை இந்தியா என்ற நிறுவனத்திலிருந்து தலைமை மற்றும் கொடையாளர்க்கான விருது.[11]
- 2013 - சிறந்த கொடையாளர்பிரிவில் ஃபோர்ப்ஸ் பரோன்ராபி விருதுக்குப் பரிந்துரை.[12]
குறிப்புகள்
தொகு- ↑ "Executive Director". Archived from the original on 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
- ↑ "HSPH Alumna Elected to Harvard's Board of Overseers". Harvard – School of Public Health. 2010. http://alumni.sph.harvard.edu/s/1319/GID2/social.aspx?sid=1319&gid=2&pgid=252&cid=1285&ecid=1285&ciid=2757&crid=0.
- ↑ "Swati Piramal | The foundation for a family". 23 February 2014. http://www.livemint.com/Politics/x9LaUEgIY4mqjN6VogiGPO/My-work-to-support-adolescent-girls-in-India.html. பார்த்த நாள்: 23 September 2016.
- ↑ "Assocham appoints Swati Piramal as its new president". 9 October 2009. http://www.business-standard.com/article/companies/assocham-appoints-swati-piramal-as-its-new-president-109100900176_1.html. பார்த்த நாள்: 23 September 2016.
- ↑ Swati Piramal joins Nestle Board of Directors. 2 August 2010. https://www.nestle.in/asset-library/documents/profile/swati_a_piramal_profileandloa.pdf. பார்த்த நாள்: 23 September 2016.
- ↑ Kanga, Fareeda (1 June 2014). "Swati Piramal: What makes her special". Mid-Day. Mid-Day Infomedia Ltd. http://www.mid-day.com/articles/swati-piramal-what-makes-her-special/15344153. பார்த்த நாள்: 23 September 2016.
- ↑ "Dr. Swati A. Piramal". Girls India. 2012 இம் மூலத்தில் இருந்து 2014-03-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140313092649/http://girlsindia.in/dr-swati-a-piramal/.
- ↑ "Swati Piramal to head ASSOCHAM, announces four-point agenda". moneycontrol.com. http://www.moneycontrol.com/news/business/swati-piramal-to-head-assocham-announces-four-point-agenda_419302.html.
- ↑ "President gives away Padma Awards". http://newsonair.nic.in/news.asp?cat=National&id=NN3842.
- ↑ "2012 Alumni Award of Merit". Harvard – School of Public Health. 2012. http://alumni.sph.harvard.edu/s/1319/GID2/social.aspx?sid=1319&gid=2&pgid=598.
- ↑ "Press Release: Celebrating 20 Years of Service to Children". Children's Hope India இம் மூலத்தில் இருந்து 2013-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130414135543/http://www.childrenshopeindia.org/2012/10/press-release-chgala2012/.
- ↑ "Philanthropy Awards 2013". Forbes. http://forbesindia.com/awards/philanthropy/award_categories.html.