சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி
சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி (Swami Avimukteshwarand Saraswati) (பிறப்பு: 1969) ஆதி சங்கரர் நிறுவிய 4 அத்வைத மடங்களில் ஒன்றான ஜோஷி மடத்தின் நடப்பு மற்றும் 46வது சங்கராச்சாரியரும் ஆவார். இவரது குருவும்; ஜோஷி மடத்தின் 45வது சஙக்ராச்சாரியான சுவாமி சொரூபானந்த சரஸ்வதி செப்டம்பர் 2022ல் மறைவிற்குப் பின்னர் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி ஜோஷி மடத்தின் சங்கராச்சரியாக பதவியேற்றார்.[1]
Swami Avimukteshwaranand Saraswati | |
---|---|
பிறப்பு | 1969 பிரம்மன்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | சங்கராச்சாரியார், ஜோஷி மடம், உத்தராகண்டம், இந்தியா |
வாழ்க்கை
தொகுசுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள பிரம்மன்பூர் கிராமத்தில் பண்டிட் ராம்சுமேருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் உமாசங்கர் பாண்டே ஆகும். இவர் துவாரகை மடத்தின் பீடாதிபதியாக இருந்த சொரூபானந்த சரஸ்வதியிடம் சீடராக சேர்ந்து, துறவற தீட்சை பெற்றார்.[2]
சர்ச்சைகள்
தொகுஜோஷி மடத்தின் 45வது சஙக்ராச்சாரி மறைந்த சுவாமி சொரூபானந்த சரஸ்வதி தன்னை ஜோஷி மடத்தின் பீடாதிபதியாக நியமித்தார் என போலியான ஆதாரங்களை காட்டி ஜோஷி மடத்தின் பீடாதிபதியாக நியமித்துக் கொண்ட சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி, ஜோஷி மடத்தின் பீடாதிபதியாக பொறுப்பு ஏற்ககூடது என இந்திய உச்ச நீதிமன்றம் 2022ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uttarakhand: Swami Avimukteshwaranand new Jyotish Peethshankaracharya". The Times of India. 2022-09-13. https://timesofindia.indiatimes.com/city/dehradun/uttarakhand-swami-avimukteshwaranand-new-jyotish-peethshankaracharya/articleshow/94183259.cms.
- ↑ "Swami Swaroopanand Saraswati's successors: TWO Shankaracharyas of two different Peeths now - DETAILS here". Zee News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-03.
- ↑ SC stops coronation of Swami Avimukteshwaranand Saraswati as Shankaracharya of Jyotish Peeth