சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி (Swami Dayananda College of Arts & Science)[1] என்பது 2001ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட தனியார் சுயநிதிக் கல்லூரி ஆகும். இது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமாகும்.
வகை | சுயநிதிக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2001 |
கல்வி பணியாளர் | 57 |
மாணவர்கள் | 1618 |
அமைவிடம் | திருவாரூர்- 612 610 , , |
வளாகம் | மஞ்சக்குடி |
சேர்ப்பு | [பாரதிதாசன் பல்கலைக்கழகம்] |
இணையதளம் | [1] |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் பிரிவு 12பி படி மானியங்களைப் பெறுவதற்கு தகுதிபெற்ற கல்லூரியாக புது தில்லி, பல்கலைக்கழக மானிய குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3]
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திலுள்ள மஞ்சக்குடியில் அமைந்துள்ளது.
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் கணினி அறிவியல், இளங்கலை ஆங்கிலம், இளங்கலை கணிதம், வர்த்தக பயன்பாடு என 20க்கும் மேல் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
- இளநிலை வணிகவியல்
- இளநிலை வணிகவியல் (வங்கி மேலாண்மை)
- இளநிலை வணிகவியல் (கணினி பயன்பாடு)
- இளநிலை வணிக நிர்வாகவியல்
- இளநிலை கணினி பயன்பாடு
- இளம் அறிவியல் கணினி பயன்பாடு
- இளம் அறிவியல் தகவல் தொழில்நுட்பவியல்
- இளம் அறிவியல் இயற்பியல்
- இளம் அறிவியல் வேதியியல்
- இளம் அறிவியல் கணிதம்
- இளங்கலை ஆங்கிலம்
- முதுநிலை கணினி அறிவியல்
- முதுநிலை வேதியியல்
- முதுநிலை வணிகவியல்