சுவீடன் மருத்துவச் சங்கம்
சுவீடன் மருத்துவச் சங்கம் அல்லது சுவீடன் மருத்துவச் சமூகம் (Swedish Medical Society; Svenska Läkresällskapet) என்பது சுவீடன் மருத்துவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு தன்னாட்சி, அறிவியல் தொழில்முறை அமைப்பாகும். சுகாதாரப் பராமரிப்பில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.[1]
நுண்ணுயிரியல் அல்லது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்த ஒரு விஞ்ஞானிக்கு ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் இச்சங்கம் பாஸ்டர் பதக்கத்தை வழங்குகிறது. இச்சமூகத்தின் அசல் பதக்கம் 1892ஆம் ஆண்டில் லூயிஸ் பாஸ்டரின் பிறந்தநாளில் பாஸ்டருக்கு வழங்கப்பட்டது. மேலும் தசாப்த விருது 1900- இல் தொடங்கப்பட்டது.[2]
அமைப்பு
தொகுசுவீடன் மருத்துவச் சங்கம் 1808ஆம் ஆண்டில் ஜேக்கப் பெர்செலியசு, ஜோனாசு என்ரிக் கிசுட்ரன், எரிக் கேடேலியசு, ஆண்டர்சு ஜோகன் காக்சுட்ரோமர், கார்ல் பிரெட்ரிக் வான் சூல்சென்ஹெய்ம், எரிக் கார்ல் டிராப்வென்பெல்ட் மற்றும் என்ரிக் கான் ஆகியோரால் நிறுவப்பட்டது.[1] இது ஐரோப்பாவில் உள்ள பழமையான மருத்துவச் சங்கமாகும்.[3] நோர்டிக் நாட்டில் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள், வேறு இடங்களில் மருத்துவத்தில் பட்டம் பெற்று, சுவீடனில் பயிற்சி பெற உரிமம் பெற்றவர்கள் அல்லது சுவீடனில் உள்ள மருத்துவ பீடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களும் முழு உறுப்பினர்களாகத் தகுதி பெற்றுள்ளனர்.[4]
2022ஆம் ஆண்டில், 20,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Svenska Läkaresällskapets historia | Svenska Läkaresällskapet". www.tam-arkiv.se. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.
- ↑ "Pasteurmedaljen 2020". Svenska Läkaresällskapet (in ஸ்வீடிஷ்).
- ↑ 3.0 3.1 "About us". Svenska Läkaresällskapet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
- ↑ "Membership". Svenska Läkaresällskapet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.