சுவேதகேது (Shvetaketu), வேத கால ரிஷியும், உத்தாலக ஆருணியின் மகனும், சீடரும் ஆவார். இருள் எனும் அறியாமையிலிருந்து (அசத்-நிலையாமை), வெளிச்சம் எனும் நிலையான சத்திய நிலையை அடைய ஒவ்வொரு ஜீவாத்மாவும் பிரம்ம வித்தையை குரு மூலம் உணர்ந்து கொள்ள வேண்டும் என உண்மையை உலகிற்கு உணர்த்தியவர்.

உபநிடதங்களில் தொகு

சுவேதகேதுவின் பெயர் பிரகதாரண்யக உபநிடதத்தின் 6.2.1 முதல் 6.2.8 முடிய பகுதிகளிலும், சாந்தோக்கிய உபநிடதத்தின் ஆறாவது அத்தியாத்தில் குறிப்பிடப்படுகிறது.

தத்துவமசி என்ற மகாவாக்கியம் தொகு

சாந்தோக்கிய உபநிடதத்தின் ஆறாம் அத்தியாயத்தில், உத்தாலக ஆருணி தனது மகனும், சீடனுமான சுவேதகேதுவிற்கு ஆத்மா அல்லது பிரம்ம தத்துவத்தை உபதேசிக்கும் போது, நீயே அதுவாக (பிரம்மமாக) இருக்கிறாய் என்பதை உணர்த்த, தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு விளக்கும் அளிக்கிறார்.[1]

மகாபாரதத்தில் தொகு

சுவேதகேதுவின் முன்னிலையிலும், தன் தந்தை உத்தாலக ஆருணியின் முன்னிலையிலும், தனது தாயின் விருப்பமின்றி, வேறு ஒரு அந்தணர் தன் தாயைக் கைபிடித்துச் செல்கையில், அச்செயலை சுவேதகேது தடுத்து நிறுத்தி, இனி ஒரு பெண், ஒரு கணவருடன் மட்டுமே இறுதி வரை வாழ வேண்டும், ஒரு ஆடவனின் குழந்தைப் பேற்றிற்காக, வேறு ஆடவனின் மனைவியை கைப்பற்றக் கூடாது என விதி வகுத்தான்.

அஷ்டவக்கிரனும், சுவேதகேதுவும் ஜனகரின் வேள்வியில் கலந்து கொண்ட பின்னர், ஜனகரின் அரசவைக்குச் சென்று, வாதப் போரில் வந்தினை எனும் தர்க்கவாதியை வாதப் போரில் சுவேதகேதுவும், அஸ்டவக்கிரனும் வென்றனர்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. நீயே அது – சாந்தோக்ய உபநிஷதம்
  2. http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவேதகேது&oldid=2716781" இலிருந்து மீள்விக்கப்பட்டது