சுசி

(சுஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சுசி அல்லது சுஷி (Sushi; கன் எழுத்து:寿司) வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்றுடன் கடலுணவுகள் இறைச்சி, காய்கறி அல்லது முட்டை போன்றவற்றை நிரப்பிகளாகவோ மேல்படையாக இட்டோ தயாரிக்கப்படும் உணவாகும். இவ்வாறு மேல்-படையாக அல்லது நிரப்பிகளாக பயன்படுத்தப்படும் உணவு சமைக்கப்பட்டதாகவோ, சமைக்கப்படாததாகவோ உப்பூட்டபட்டவையாகவோ இருக்கலாம். எல்ல சுசி வகையிலும் சோறு கட்டாய அங்கமாகும்.[1][2][3]

தாயாரிப்பு முறையின் படி சுசி வகைகள்

தயாரிப்பு முறைகள்

தொகு

சுசியின் வகை அது தயாரிக்கப்படும் முறையால் அல்லது பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகள் போன்றவற்றால் வேறுபடுத்தப்படுகிறது. சுசி தயாரிக்கபடும் முறைகளைப் பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம்;

  1. மகிசுசி: நொரியில் (கடல் பாசியை மெல்லியதாக அழுத்தி உலரவைத்து செய்யப்படுவது) சோறு மற்றும் ஏதாவது நிரப்பிகள சுற்றப்பட்டு உருளை வடிவில் செய்யப்படுபவை. மக்கி நான்கு வகைப்படும்.
    1. ச்சூ மக்கி: மத்திம அளவாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
    2. ஃபூடொ மக்கி: தடிப்பாக உருட்டப்பட்ட மக்கி, ஒன்ற்கு மேற்பட்ட மூலப் பொருட்களைக் கொண்டிருக்கும்.
    3. ஒசோ மக்கி: மெல்லியதாக உருட்டப்பட்ட மக்கி, ஒரு மூலப்பொருளை மட்டுமே கொண்டிருக்கும்.
    4. டெமக்கி: கூம்பு வடிவிலான மக்கி சுசி
  2. நிகிரிசுசி: கையில் பிடிக்கப்படும் நீள் கோள வடிவான சோறு உருண்டைக்கு மேல்-படை ஒன்று இட்டு செய்யப்படும் சுசி
  3. குண்கன் மகிசுசி: நொரியால் செய்யப்பட்ட உருளைக்குள் அடியில் சோறு இட்டு மேல் பகுதியில் மீன் முட்டை இட்டு செய்யப்படும் சுசி

பயன்படுத்தப்படும் மேல்-படை அல்லது நிரப்பிகளைக் கொண்டு சுசி வகைப்படுத்தப்படும் போது அது சோறுடன் பயன்படுத்தப்படும் மற்றை மூலப்பொருளின் பெயரை கொள்ளும். இதன் படி பல சுசி வகைகள் காணப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sushi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Sushi – How-To". FineCooking (in அமெரிக்க ஆங்கிலம்). 1998-05-01. Archived from the original on 2019-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-11-04.
  2. "The Mysteries of Sushi – Part 2: Fast Food". Toyo Keizai. 23 May 2015. Archived from the original on 9 September 2017.
  3. "When Sushi Became a New Fast Food in Edo". Nippon.com. 22 December 2020. Archived from the original on 18 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசி&oldid=4098958" இலிருந்து மீள்விக்கப்பட்டது