சு. இராஜகுமார்
இந்திய அரசியல்வாதி
சு. இராஜகுமார் (S. Rajakumar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] மயிலாடுதுறையில் வசித்துவரும் இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
இராஜகுமார் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீண்டும் 2011-ல் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தேமுதிக வேட்பாளர் ஆர். அருள்செல்வனிடம் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[2] பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஏ. பழனிச்சாமியைத் தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Nagapattinam, Mayiladuthurai turn DMK's fortress". The Hindu. 2 May 2021. https://www.thehindu.com/elections/tamil-nadu-assembly/nagapattinam-mayiladuthurai-turn-dmks-fortress/article34466511.ece."Nagapattinam, Mayiladuthurai turn DMK's fortress". The Hindu. 2 May 2021. Retrieved 9 June 2021.
- ↑ Krishnamoorthy, R (27 March 2021). "Tough fight between Congress, PMK". The Hindu. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tough-fight-between-congress-pmk/article34171540.ece.