சூசி டிலேர்
சுசி டிலேர் ( Suzy Delair ) (பிறப்பு சுசெட் பிர்ரெட் டிலேர் ;[1][2] டிசம்பர் 31, 1917 - மார்ச் 15, 2020) ஓர் பிரான்சிய நடிகையும், நடனக் கலைஞரும், பாடகியும், நகைச்சுவை நடிகையும்ர் மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சில் தொடங்கிய பல்வேறு பொழுதுபோக்குகளின் ஒரு நாடக வகை
யான வாட்வில்லின் நட்சத்திரமும் ஆவார்.[3]
சுயசரிதை
தொகுஇவரது தந்தை விலையுயர்ந்த தானுந்துகளின் உட்புறத்தை மேம்படுத்தும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார். இவரது தாய் ஒரு தையல்காரர் ஆவார். தாயாகவும் இருந்தார். பாரிஸில் பிறந்த இவர் மான்ட்மார்ட்ரேவில் வளர்ந்தார். பின்னர், இவர் <i>லா ஸ்கலா</i> இசைப்பள்ளியில் இசை பயின்றார்.[4]
திரைப்படம்
தொகுஹென்றி-ஜார்ஜஸ் க்ளௌசோட், ஜீன் ட்ரெவில்லே, ஜீன் கிரெமில்லன், மார்செல் எல் ஹெர்பியர், கிறிஸ்டியன்-ஜாக், மார்செல் கார்னே, லுச்சினோ விஸ்கொன்டி, ரெனே கிளெமென்ட் மற்றும் ஜெரார்ட் வுரி இயக்கிய படங்களில் நடித்தார்.
1947 ஆம் ஆண்டில், தி மர்டர் லைவ்ஸ் அட் நம்பர் 21 என்ற படத்தில் டிலேர் ஒரு துணைப் பாத்திரத்தில் நடித்தார். இது நியூயார்க் நகரில் திரையிடப்பட்டது.[5] பிரான்சில் படமாக்கப்பட்டு 1951 இல் வெளியான லாரல் மற்றும் ஹார்டியின் அடோல் கே ( உட்டோபியா என்றும் அழைக்கப்படுகிறது) நகைச்சுவைத் திரைப்படத்தில் முக்கிய பெண் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.[2]
இசை
தொகுடிலேர் படங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு, மேடை நாடங்களில் நடித்தார்.[4] 28 பிப்ரவரி 1948 அன்று ஹோட்டல் நெக்ரெஸ்கோ என்ற நாடகத்தில் முதல் நைஸ் ஜாஸ் திருவிழாவின் போது இவர் சி`செட் சி பான் என்ற பாடலை பாடினார். அமெரிக்கப் பாடகரும் ஜாசு ஊதுகொம்பு இசைக் கலைஞருமான லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் கலந்துகொண்டு பாடலை விரும்பிக் கேட்டார். ஜூன் 26, 1950 இல், நியூயார்க் நகரில் சை ஆலிவர் மற்றும் அவரது இசைக்குழுவுடன் தனது பாடலின் அமெரிக்கப் பதிப்பை ( ஜெர்ரி சீலன் எழுதிய ஆங்கில வரிகள்) பதிவு செய்தார். இது வெளியிடப்பட்டபோது, வட்டு உலகளாவிய வெற்றியைப் பெற்றது. மேலும் இந்த பாடல் சிறந்த சர்வதேச பாடகர்களால் நிகழ்த்தப்பட்டது.
சொந்த வாழ்க்கை
தொகுடிலேர், பிரெஞ்சு திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளருமான ஹென்றி-ஜார்ஜஸ் க்ளூசோட் என்பவருடன் 12 ஆண்டுகள் துணையாக இருந்தார்.[4]
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- ↑ "French movie star Suzy Delair dies". Texarkana Gazette. New York Times News Service. 21 March 2020 இம் மூலத்தில் இருந்து 28 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200728151755/https://www.texarkanagazette.com/news/national/story/2020/mar/22/french-movie-star-suzy-delair-dies/821646/. பார்த்த நாள்: 28 July 2020.
- ↑ 2.0 2.1 "Suzy Delair, French Actress and Chanteuse, Dies at 102". The Hollywood Reporter. 16 March 2020 இம் மூலத்தில் இருந்து 28 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200728150957/https://www.hollywoodreporter.com/news/suzy-delair-dead-french-actress-chanteuse-was-102-1284951. பார்த்த நாள்: 28 July 2020. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "hr" defined multiple times with different content - ↑ "Fired by passion for 85 years". The Los Angeles Times. January 17, 2003. https://www.newspapers.com/clip/56237504/suzy-delair/. பார்த்த நாள்: July 28, 2020.
- ↑ 4.0 4.1 4.2 "A character who hits close to home". The Los Angeles Times: p. E 7. 17 January 2003. https://www.newspapers.com/clip/56237469/suzy-delair/. பார்த்த நாள்: July 28, 2020. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name ":0" defined multiple times with different content - ↑ "'Murder Lives at 21' Coming Here Aug. 16". The Brooklyn Daily Eagle (New York, Brooklyn): p. 4. August 8, 1947. https://www.newspapers.com/clip/27374155/the_brooklyn_daily_eagle/. பார்த்த நாள்: 19 January 2019.