சூடான் பொது விடுமுறை நாட்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
சூடானின் பொது விடுமுறை நாட்கள் (Public holidays in Sudan) ஒவ்வோர் ஆண்டும் பின்வருவருமாறு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன:[1]
- சனவரி 1 - விடுதலை நாள்
- சனவரி 7 - கோப்துக்களின் கிறித்துமசு
- சூன் 3 - புரட்சி நாள்
- திசம்பர் 25 - கிறித்துமசு
இவற்றை தவிர இசுலாமிய நாட்காட்டியின்படி நிர்ணயிக்கப்படும் இசுலாமிய சிறப்பு நாட்களும் இங்கு விடுமுறை நாட்களாகும். இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் சுழற்சியின் மூலம் தோன்றும் பிறைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கிரெகொரியின் நாட்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் நாட்கள் கிரகோரியன் நாட்காட்டியின் நாட்களை விட 10 அல்லது 11 நாட்கள் முந்தியதாக இருக்கும். மேலும் இசுலாமிய விடுமுறைகள் நிலவின் வளர்ச்சி நிலைகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் இடப்படுகின்றன.
- அல்-மவ்லிது அல் நபவி (இறைதூதர் பிறந்த நாள்)
- ஈத்-உல்-பித்ர் (இரம்சான் மாத முடிவு)
- இசுலாமியப் புத்தாண்டு (ஹிஜ்ரி புதுவருடம்)
- ஈத்-அல்-அதா (தியாகத் திருநாள் விருந்து)
- கோப்துக்களின் உயிர்ப்பு ஞாயிறு