மீயொளிர் விண்மீன் வெடிப்பு

(சூப்பர்நோவா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும். மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் ஒரு முழு நாள்மீன்பேரடை முழுவதையும் விஞ்சும் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. குறைந்த கால அளவிலே உணரக்கூடிய (சில வாரங்கள் அல்லது மாதங்கள்) இத்தகைய ஒளிர்வு ஆற்றல், சூரியன் தன் வாழ்நாள் முழுவதும் வெளியிடக்கூடிய மிகப்பெரும் ஆற்றலைவிட அதிகமானது. இத்தகைய வெடிப்பின் மூலம் சிதறும் விண்மீன் எச்சங்கள் ஒளியின் வேகத்தில் பத்தில் ஒரு மடங்கு வேகம் வரையிலும் கூட சிதறுகின்றன. மேலும் வெடிப்பின் அதிர்வலைகள் விண்மீன் மண்டலத்தின் முழுவதும் பரவ வல்லவை.[1][2][3]

SN 1604 மீஒளிர் விண்மீன் வெடிப்பின் எச்சம்.

அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நொதுமி விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Zwicky, Fritz (1 January 1940). "Types of Novae" (in en). Reviews of Modern Physics 12 (1): 66–85. doi:10.1103/RevModPhys.12.66. பன்னாட்டுத் தர தொடர் எண்:0034-6861. Bibcode: 1940RvMP...12...66Z. https://link.aps.org/doi/10.1103/RevModPhys.12.66. 
  2. Osterbrock, D. E. (2001-12-01). "Who Really Coined the Word Supernova? Who First Predicted Neutron Stars?". American Astronomical Society Meeting Abstracts 199: 15.01. Bibcode: 2001AAS...199.1501O. https://ui.adsabs.harvard.edu/abs/2001AAS...199.1501O. 
  3. Joglekar, H.; Vahia, M. N.; Sule, A. (2011). "Oldest sky-chart with Supernova record (in Kashmir)". Purātattva: Journal of the Indian Archaeological Society (41): 207–211. http://www.tifr.res.in/~archaeo/papers/Prehistoric%20astronomy/Oldest%20Supernova%20record%20in%20Kashmir.pdf. பார்த்த நாள்: 29 May 2019.