சூரியச் சுழற்சி 18

சூரியச் சுழற்சி 18 (Solar cycle 18) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட பதினெட்டாவது சூரியச் சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1944 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 10.2 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 18 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 151.8 எண்ணிக்கையும் (மே 1947) குறைந்த பட்சமாக 3.4 எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 446 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது.[4][5][6]

சூரியச் சுழற்சி 18
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்பிப்ரவரி 1944
இறுதி நாள்ஏப்ரல் 1954
காலம் (வருடங்கள்)10.2
அதிக கணிப்பு151.8
அதிக கணிப்பு மாதம்மே 1947
குறைந்த கணிப்பு3.4
Spotless days446
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 17 (1933-1944)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 19 (1954-1964)

இச்சுழற்சியானது பெரிய சூரியப் புள்ளிகளால்[7] அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும் இக்காலத்தில் 10.7 செ.மீ அளவுள்ள (2800 மெகா எர்ட்சு) சூரியக் கதிரியக்க பாய்மம் வெளியிடப்பட்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன [8]. இத்தகைய கதிரியக்கப் பாய்மங்களின் அளவுகள் இச்சுழற்சிக் காலத்தில் அதிகம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. 7.0 7.1 Dodson, Helen W.; Hedeman, E. Ruth; Mohler, Orren C. (August 1974). "Comparison of activity in solar cycles 18, 19, and 20". Reviews of Geophysics 12 (3): 329–341. doi:10.1029/RG012i003p00329. 
  8. Petersen, Edward (2012). Single Event Effects in Aerospace. Wiley. p. 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1118084306.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_18&oldid=3791886" இலிருந்து மீள்விக்கப்பட்டது