சூரியச் சுழற்சி 20

சூரியச் சுழற்சி 20 (Solar cycle 20) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட இருபதாவது சூரியச் சுழற்சியாகும்[1][2]. இச்சுழற்சி 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 1976 ஆம் ஆண்டு சூன் மாதம் வரையில் 11.7 ஆண்டுகளுக்கு நீடித்ததது. பனிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 20 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 110.6 எண்ணிக்கையும் (நவம்பர்1968) குறைந்த பட்சமாக 12.2 என்ற எண்ணிக்கையுமாக கணக்கிடப்பட்டது[3] . மேலும், இச்சுழற்சிக் கலத்தில் தோராயமாக 272 நாட்கள் சூரியப்புள்ளிகள் எதுவும் காணப்படாமல் இருந்ததாக கணக்கிடப்பட்டது[4][5][6]

சூரியச் சுழற்சி 20
சுரியச் சுழற்சி 20 இல் பதிவான சூரியக் காந்த வரைவு (1974).
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்அக்டோபர் 1964
இறுதி நாள்சூன் 1976
காலம் (வருடங்கள்)11.7
அதிக கணிப்பு110.6
அதிக கணிப்பு மாதம்நவம்பர் 1968
குறைந்த கணிப்பு12.2
Spotless days272
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 19 (1954-1964)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 21 (1976-1986)
சூரியச் சுழற்சி 20 இல் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய தீக்கொழுந்துகளில் ஒன்று (19 திசம்பர் 1973).

மற்ற சூரியச் சுழற்சிகளுடன் ஒப்பிடுகையில் இச்சுழற்சியின் இறக்ககால நிலையில் (1973–1975) புவிகாந்தச் செயற்பாடுகள் வழக்கத்தைவிட உயர்வாக இருந்தன[7].

மேலும், இச்சுழற்சியில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சூரியப் புரோட்டான் ஒழுக்குப்பாய்வு மாதிரியில் பயன்படுத்தப்பட்டன. இம்மாதிரியானது இருபத்தி ஒன்றாவது சூரியச் சுழற்சி காலத்திற்கான விண்வெளித் திட்டங்களுக்குத் திட்டமிட உதவியது[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Kane, R.P. (2002). "Some Implications Using the Group Sunspot Number Reconstruction பரணிடப்பட்டது 2012-12-04 at Archive.today". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Spots?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
  4. Spotless Days. "[2]"
  5. What's Wrong with the Sun? (Nothing) more information: Spotless Days. "[3] பரணிடப்பட்டது 2008-07-14 at the வந்தவழி இயந்திரம்"
  6. Solaemon's Spotless Days Page. "[4] பரணிடப்பட்டது 2017-07-22 at the வந்தவழி இயந்திரம்"
  7. Gosling, J. T.; Asbridge, J. R.; Bame, S. J. (1 August 1977). "An unusual aspect of solar wind speed variations during solar cycle 20". Journal of Geophysical Research 82 (22): 3311–3314. doi:10.1029/JA082i022p03311. 
  8. Miroshnichenko, Leonty (2001). Solar Cosmic Rays. Springer. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0792369289.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_20&oldid=3791917" இலிருந்து மீள்விக்கப்பட்டது