சூரியத் தாரை

சூரியத் தாரைகள் (Solar jets) சூரியனின் வளிமண்டலத்தில் மின்மத்தின் பெயர்வுநிலை, திறள்பாய்வுகள் ஆகும். அவை பல்வேறு அளவுகள், வெப்பநிலைகள் மற்றும் இடங்களில் நிகழ்கின்றன. மேலும் காந்த மீளிணைப்பு வழியாக காந்த ஆற்றலை வெளியிடுவதால் தோன்றுகின்றன. ஒரு சூரியத் தாரையால் வெளியேற்றப்படும் மின்மம் சூரியனில் இருந்து நேராக அல்லது சாய்ந்த தடங்களில் உள்ளூர் காந்தப்புலத்தைப் பின்பற்றிச் செல்லும், .

தாரை போன்ற நிகழ்வுகள் காணப்படும் சூரிய வளிமண்டலத்தின் பரந்த அளவிலான வெப்பநிலை ப்பகுதிகள் காரணமாக, சூரியத் தாரைத் தளங்கள் பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சூரியப்புறணி, வண்ணக்கோள வெப்பநிலையில் காணப்பட்ட தாரைப் பாய்வு நிகழ்வுகள் முறையே சூரியப்புறணித் தாரை, வண்ணக்கோலத் தாரை (அல்லது வண்ணக்கோள அலைகள் ) என குறிப்பிடப்படுகின்றன, மேலும் எக்சுக்கதிர், புற ஊதா, வெள்ளை ஒளி, Hα ஆகியவற்றை நோக்கும்போது, அவை சில நேரங்களில் எக்சுக்கதிர்த் தாரைத் தளங்கள், புற ஊதா தாரைத் தளங்கள், வெள்ளை-ஒளி தாரைத் தளங்கள்,என Hα தாரைத் தளங்கள் (அல்லது Hα அலைகள் ) முறையே குறிப்பிடப்படுகின்றன. இந்நிகழ்விலிருந்து வெளியேற்றப்பட்ட மின்மம் பரந்த அளவிலான வெப்பநிலைகளைக் கொண்டிருப்பதால், எந்த ஒரு நிகழ்வையும் அலைவரிசை அல்லது அலைவரிசைகளைப் பொறுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்களால் குறிப்பிடப்படலாம். கூடுதலாக, செயல் முனைவான பகுதி, அமைதியான-சூரிய மண்டலம், ஒரு சூரியப்புறணித் துளை அல்லது சூரிய முனைகளில் அமைந்திருக்கும் போது, அவை முறையே செயல்முனைவுத் தாரை, அமைதியான சூரியத் தாரை, சூரியப்புறணித் துளைத் தாரை அல்லது சூரியமுனைத் தாரை என அழைக்கப்படுகின்றன. மேலும், சில சுரியத் தாரைத் தளங்கள் மிகவும் சிறிய வண்ணக்கோளப் பொட்டுகளுடன் உள்ள ஒற்றுமைகள் காரணமாக பெரும்பொட்டு என வகைப்படுத்தப்படுகின்றன. [1]

சூரியத் தாரைகள் சில சமயங்களில் சூரியனின் வளிமண்டலத்தில் உள்ள மற்ற பெயர்நிலை, வெடிப்பு நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. சூரியத் தளநடுக்கம் சூரியப்புறணிப் பொருண்மை வெளியேற்றங்கள் போன்றவை-மேலும் தூண்டுதலான சூரியத் துகள் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை. [2] [3] [4] [5] [6]

மேற்கோள்கள்

தொகு
  1. Loboda, Ivan P.; Bogachev, Sergej A. (4 February 2019). "What is a Macrospicule?". The Astrophysical Journal 871 (2): 230. doi:10.3847/1538-4357/aafa7a. Bibcode: 2019ApJ...871..230L. 
  2. Raouafi, N. E.; Patsourakos, S.; Pariat, E.; Young, P. R.; Sterling, A. C.; Savcheva, A.; Shimojo, M.; Moreno-Insertis, F. et al. (November 2016). "Solar Coronal Jets: Observations, Theory, and Modeling". Space Science Reviews 201 (1-4): 1–53. doi:10.1007/s11214-016-0260-5. Bibcode: 2016SSRv..201....1R. 
  3. Moore, Ronald L.; Cirtain, Jonathan W.; Sterling, Alphonse C.; Falconer, David A. (1 September 2010). "Dichotomy of Solar Coronal Jets: Standard Jets and Blowout Jets". The Astrophysical Journal 720 (1): 757–770. doi:10.1088/0004-637X/720/1/757. Bibcode: 2010ApJ...720..757M. 
  4. Shen, Yuandeng (February 2021). "Observation and Modelling of Solar Jets". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 477 (2246): 20200217. doi:10.1098/rspa.2020.0217. Bibcode: 2021RSPSA.47700217S. 
  5. Pariat, E.; Antiochos, S. K.; DeVore, C. R. (20 January 2009). "A Model for Solar Polar Jets". The Astrophysical Journal 691 (1): 61–74. doi:10.1088/0004-637X/691/1/61. Bibcode: 2009ApJ...691...61P. https://archive.org/details/sim_astrophysical-journal_2009-01-20_691_1/page/61. 
  6. Innes, D. E.; Bučík, R.; Guo, L.‐J.; Nitta, N. (November 2016). "Observations of Solar X‐ray and EUV Jets and Their Related Phenomena". Astronomische Nachrichten 337 (10): 1024–1032. doi:10.1002/asna.201612428. Bibcode: 2016AN....337.1024I. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியத்_தாரை&oldid=3852359" இலிருந்து மீள்விக்கப்பட்டது