சூர்யோதயம் (திரைப்படம்)

1999 ஆண்டைய திரைப்படம்

சூர்யோதயம் (suryoyathayam) 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும்.[1] எல். வி. ஆதவன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் விஜயசாந்தி, ரகுமான் ஆகியோரும் அவர்களுடன் இணைந்து விஜயகுமார், அனுஷா, நிழல்கள் ரவி, விஸ்வஜித், ஹரிராஜ், சார்லி மற்றும் குமரேசன் ஆகியோரும் நடித்திருந்தனர். கிரண் ஜின்ஜின் லாலா இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஞானி இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் அக்டோபர் 7, 1999 ல் வெளியிடப்பட்டுள்ளது.[2][3]

சூர்யோதயம்
இயக்கம்எல். வி. ஆதவன்
தயாரிப்புகிரண் ஜின்ஜின் லாலா
கதைஎல். வி. பிரதர்ஸ்
இசைஞானி
நடிப்பு
ஒளிப்பதிவுபிலேக்ஸ் ராய்
படத்தொகுப்புஎம். ஆர். லீ
ஜி. ரி. செல்வம்
கலையகம்எல். வி. பிரதர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 7, 1999 (1999-10-07)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

பாலா (ரகுமான்) நன்றாக பாடக்கூடியவன். அவனும் அவனின் நண்பர்களான அஜித் (ஹரிராஜ்), அஜித்தின் பெண்நண்பி அமிர்தா (அனுசா), நம்பி (சார்லி), வில்சன் (குமரேசன்) ஆகியோர் ஒரு குழுவாக இணைந்திருர்தனர். அவர்களிற்கு ஒரு நல்ல நிகழ்ச்சி கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பிரபலமாவது கடினமாக காணப்பட்டது. ஒரு முறை ஒரு மேடை நிகழ்ச்சியில் அவர்கள் திறமையை காட்டுவதற்கு அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. அதில் அவர்களின் முழுக்திறமையையும் வெக்ஷிக்காட்டுகின்றனர். இதனைப்பார்த்த பிரபல கச்சேரி ஒருங்கிணைப்பாளர் ஜே. ஆர். (விஜயகுமார்) அவர்களுக்கு இலங்கையில் ஒரு கச்சேரி நடாத்த சந்தர்ப்பம் வழங்குகிறார்.

அதேசமயம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொடூர தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது. தீவிரவாதிகள் ரிமோட் கட்டுப்பாட்டில் இயங்கும் கார்களை பயன்படுத்தி குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். சிபிஐ அதிகாரி இந்திரா (விஜயசாந்தி) தீவிரவாதிகளை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்டார். இவர் இறுதியாக தாவுட் (விஸ்வஜித்) எனும் தீவிரவாத கும்பலின் தலைவனை கைது செய்யினும் அவன் ஒரு வழியாக இந்திராவிடம் இருந்து தப்பித்து தகிஸ்தான் எனும் நாட்டிற்கு தப்பி விடுகிறான். தகிஸ்தான் மிக மோசமான குற்றங்கள் நடக்கும் நாடாகும்.

ஜே. ஆர். இற்கும் இன்னொரு முகம் இருந்தது. அவர் சர்வதேச ஆயுத விற்பனை செய்பவர். மேலும் அவர் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களையும் விற்றிருந்தார். ஜே. ஆர். , கண்ணன் மற்றும் அவர்களின் நண்பர்களும் ஒரு கச்சேரிக்காக தகிஸ்தானிற்கு வந்தனர். அங்கு ஜே. ஆர். மற்றும் தகிஸ்தானின் இரகசிய செயற்பாட்டாளர் இருவரும் சேர்ந்து தாவுட் மீது சந்தேகப்பட்டு அவனை கொன்றுவிடுகின்றனர். பின்னர் ஜே. ஆர். விஞ்ஞானி கலாதரன் (நிழல்கள் ரவி) வெடிகுண்டு தாக்குதலை தடுக்க வழிமுறை கண்டுபிடித்த படியால் அவரையும் கொன்று விடுகின்றான். பிறகு பாலாவிற்கு இவ்விடயங்கள் தெரிய அவன் அதனை அவனின் நண்பர்களிற்கு தெரியப்படுத்தும் போது ஜே. ஆர். இதனை அவதானித்து விட ஜே ஆர் இன் அடியாட்களால் பாலாவும் கொல்லப்பட்டு விடுகிறான். நம்பி, அஜித், வில்சன் ஆகியோர் தனது நண்பனிற்கு நீதியை பெற்றுகொடுப்பதோடு ஜே. ஆரின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் பற்றி இந்திராவிற்கு தெரிவித்து விடுகின்றனர். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு
  • விஜயசாந்தி - இந்திரா
  • ரகுமான் - பாலா
  • விஜயகுமார் - ஜே. ஆர்.
  • அனுசா - அமிர்தா
  • நிழல்கள் ரவி- கலாதரன்
  • விஸ்வஜித் - தாவுட்
  • ஹரிராஜ் - அஜித்
  • சார்லி - நம்பி
  • குமரேசன் - வில்சன்
  • பிரதாபசந்திரன் - முதல்வர்
  • குமரிமுத்து
  • டெல்லி கண்ணன்
  • பாண்டுரங்கம்
  • பெகேடி சிவராம்
  • பக்ரியர் - மலிக்
  • உல்மஸ்
  • ஹபிபா
  • சபிதா பெரேரா
  • வீரசிங்க ரணதுங்க
  • சனுஜா விபிலி
  • ஜகுவர் தங்கம் - விக்ரம்
  • பி. எச். அப்துல் ஹமிட் - அவராகவே

ஞானி இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1999 ல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்வரிகளை கோவி கண்ணன் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Suryodayam ( 1999 )". Cinesouth. Archived from the original on 2004-08-25. பார்க்கப்பட்ட நாள் 2016-11-14.
  2. "Sooryodayam (1999) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2016-11-14.
  3. "Suryodhayam (1999)". gomolo.com. Archived from the original on 2016-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-11-14.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யோதயம்_(திரைப்படம்)&oldid=4146434" இலிருந்து மீள்விக்கப்பட்டது