சூல்பை நீர்க்கட்டி

சூல்பை நீர்க்கட்டி (ovarian cyst) அல்லது சினைப்பை நீர்க்கட்டி என்பது சூல்பையினுள் உண்டாகக்கூடிய திரவம் நிறைந்த பை போன்ற உள்ளமைவு உடைய நீர்க்கட்டியாகும்.[1] பெரும்பாலும் இவை இருப்பதற்கான எந்த அறிகுறியும் ஏற்படுவதில்லை.[1] எப்பொழுதாயினும் அவற்றில் வீக்கம், அடிவயிற்றுவலி, கீழ் முதுகு வலி ஆகியன தோன்றலாம்.[1] பெரும்பாலான சூல்பை நீர்க்கட்டிகள் தீங்கற்றவை.[1] இக்கட்டிகள் வெடிக்கும் பொழுது அல்லது சூல்பை முறுக்கம் ஏற்படும்பொழுதோ மிகக் கடுமையான வலியைத் தோற்றுவிக்கும்.[1] இதனால் வாந்தி அல்லது தலைச்சுற்றல் இருக்கும்.[1]

சூல்பை நீர்க்கட்டி
சிறப்புமகளிர் மருத்துவவியல்
அறிகுறிகள்கீழ் முதுகு வலி, லேசான வயிற்றுவலி
சிக்கல்கள்சூல்பைச் சிதைவு, சூல்பை முறுக்கம்[1]
வகைகள்சினைக்கட்டி, கருப்பையகப்படலக் கட்டிகள், சூல்பைப் புற்றுநோய்[1]
நோயறிதல்மீயொலி[1]
நிகழும் வீதம்8% மாதவிடாய் நிறுத்தம்[1]

பெரும்பாலான சூல்பை நீர்க்கட்டிகள் கருமுட்டை தொடர்பாக ஏற்படுபவை. சூல்பையின் சுரப்பிப்பை நுண்ணறை(Follicular cyst of ovary) அல்லது பருவ கருமுட்டை பைத்துகள் (Corpus luteum cyst)கட்டி ஆகியவற்றில் ஏதேனுமொன்றில் இவை ஏற்படலாம் [1] மற்றொன்று கருப்பை உட்படலத்தில் ஏற்படும் கட்டிகள் அல்லது உள்தோல் கட்டிகள் அல்லது சுரப்பிக்கட்டிகள் ஆகியவையாகும்.[1] இரண்டு பக்க சினைப்பையிலும் தோன்றும் பல சிறிய நீர்க்கட்டிகளால் சினைப்பை நோய்க்குறி ஏற்படக்கூடும்.[1] சூல்பை நீர்க்கட்டிகள் ஏற்பட்டதன் காரணத்தால் இடுப்பு அழற்சி நோய்க்கூட ஏற்படலாம்.[1] மிக அரிதாக இந்நீர்க்கட்டிகள் சூல்பை புற்றுநோயின் காரணமாகத் தோன்றிய ஒரு வடிவாகவும் இருக்கக்கூடும்.[1] இடுப்பெலும்பு பரிசோதனை, மீயொலிச்சோதனை அல்லது விவரஙக்ளைச் சேகரிக்க மேற்கொள்ளப்படும் பிற சோதனைகள் மூலமும் கண் கண்டறியலாம்.[1]

பெரும்பாலும் நீர்க்கட்டிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதன் மூலம் சிகிச்சை செய்யப்படுகிறது.[1] வலி ஏற்பட்டால் பாராசிட்டமால் அசிட்டாமினோபின் அல்லது ஐபுரூபன் மருதுகள் பயன்படுத்தப்படுகின்றன.[1] அடிக்கடி இக்கட்டியால் பாதிக்கப்படுவோர்களுக்கு பிறப்புக்கட்டுப்பாட்டுச் சுரப்பி சிகிச்சை மேற்கொள்ளலாம்.[1] ஆயினும் பிறப்புக்கட்டுப்பாட்டுச் சுரப்பி சிகிச்சை இக்கட்டிகளுக்கான சரியான சிகிச்சைமுறை என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை.[2] பல மாதங்களாகியும் கட்டிகள் கரைந்து வெளியேறவில்லை என்றாலோ, பெரிதானாலோ, வழக்கத்தைவிட மாறுபட்டுக் காணப்பட்டாலோ அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படலாம்.[1]

இனப்பெருக்க வயதுடைய பெண்களில் அதிகமானோருக்கு ஒவ்வொரு மாதமும் சிறிய நீர்க்கட்டிகள் உருவாகின்றன.[1] மாதவிடாய் நிறுத்த காலத்திற்கு முன்புள்ள எட்டு விழுக்காடு பெண்களுக்கு பெரிய அளவிலான நீர்க்கட்டிகள் ஏற்படுகின்றன.[1]மாதவிடாய் நிறுத்த காலத்திற்குப் பின் 16 % பெண்களுக்கு சூல்பை நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.[1][3]

நோயறிகுறிகள் தொகு

கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றலாம் அல்லது சில தோன்றாமலுமிருக்கலாம்.[4]

  • அடிவயிற்று வலி. குறிப்பாக பாலுறவின் போது ஏற்படும் இடுப்பெலும்பு அல்லது அடிவயிறு வலி.
  • குருதிப்போக்கு மாதவிடாய்க்காலத்தில் அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ ஏற்படும் வலி: ஒழுங்கற்ற மாதவிடாய், அசாதாரணமாக கருப்பையிலிருந்து குருதி வெளியேறுதல்
  • அடிவயிறு நிரம்பியிருத்தல், எடை கூடியிருத்தல், அழுத்தம், வீக்கம் அல்லது அடிவயிறு ஊதியிருத்தல் ஆகியன.
  • சினைப்பையில் நீர்க்கட்டியானது வெடித்திருந்தால் கீழ் அடிவயிற்றில் ஒரு பக்கமாகத் திடீரென கூர்மையான வலி ஏற்படும்
  • சிறுநீர்க் கழித்தலில் மாற்றம் அல்லது அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் (சிறுநீரை முழுதுமாக வெளியேற்ற இயலாமை) அல்லது இடுப்பகுதிகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக குடலியக்கங்களில் கடினத் தன்மை ஏற்படுதல்.
  • சோர்வு, தலைவலி
  • குமட்டல், வாந்தி
  • உடல் எடை அதிகரித்தல்

நீர்க்கட்டிகள் காரணமாக ஏற்படும் பிற அறிகுறிகள்:[4]

சினைப்பைக் கட்டிகளல்லாத நீர்க்கட்டிகளால் ஏற்படும் கருத்தரிப்புத் தொடர்பான விளைவுகள் தெளிவாக இல்லை.[5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 1.20 1.21 1.22 "Ovarian cysts". Office on Women's Health. November 19, 2014. Archived from the original on 29 June 2015. பார்க்கப்பட்ட நாள் 27 June 2015.
  2. Grimes, DA; Jones, LB; Lopez, LM; Schulz, KF (29 April 2014). "Oral contraceptives for functional ovarian cysts.". The Cochrane Database of Systematic Reviews 4 (4): CD006134. doi:10.1002/14651858.CD006134.pub5. பப்மெட்:24782304. 
  3. Mimoun, C; Fritel, X; Fauconnier, A; Deffieux, X; Dumont, A; Huchon, C (December 2013). "[Epidemiology of presumed benign ovarian tumors].". Journal de Gynecologie, Obstetrique et Biologie de la Reproduction 42 (8): 722–9. doi:10.1016/j.jgyn.2013.09.027. பப்மெட்:24210235. 
  4. 4.0 4.1 Ovarian Cysts at eMedicine
  5. Legendre, G; Catala, L; Morinière, C; Lacoeuille, C; Boussion, F; Sentilhes, L; Descamps, P (March 2014). "Relationship between ovarian cysts and infertility: what surgery and when?". Fertility and Sterility 101 (3): 608–14. doi:10.1016/j.fertnstert.2014.01.021. பப்மெட்:24559614. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்பை_நீர்க்கட்டி&oldid=3759453" இலிருந்து மீள்விக்கப்பட்டது