சூல்பை முறுக்கம்

சூல்பை முறுக்கம் அல்லது சூலக முறுக்கம் (Ovarian torsion) என்பது சூல்பையானது மற்ற உள்ளுறுப்புகளுடனான இணைப்பில் சற்று முறுக்கிக் காணப்படுதலாகும். இதனால் இரத்த ஓட்டமானது அப்பகுதிக்குக் குறைந்து காணப்படும்.[3][4] இடுப்பெலும்பு அல்லது இடுப்புப் பகுதியின் ஒரு புறத்தில் மட்டும் பொதுவாக வலியேற்படும்.[2][5] பொதுவாக திடீரென வலி ஏற்படும் ஆனால் இது அனைவருக்கும் எப்பொழுதும் ஏற்படுவதில்லை.[2] பிற அறிகுறியாகக் குமட்டலும் ஏற்படும்.[2] தொற்றுநோய்கள், குருதிப் போக்கு அல்லது மலட்டுத்தன்மை ஆகியவை இதனால் ஏற்படும் சிக்கல்களாகும்.[2][5]

சூல்பை முறுக்கம்
சிறப்புமகளிர் நோய் மருத்துவவியல்[1]
சிக்கல்கள்மலட்டுத்தன்மை[2]
சிகிச்சைஅறுவை சிகிச்சை[1]

சூலக நீர்க்கட்டிகள், சூலகம்விரிவடைதல், சூலகக் கட்டிகள், கருத்தரிப்பு, மகப்பேறுக்கான சிகிச்சைகள், குழந்தைப் பிறப்பைத் தடுக்க கருமுட்டைவரும் குழாயைக் கட்டுதல் ஆகியவை சூலக முறுக்கத்திற்கான தீவிரக் காரணிகளாகும்.[2][3][5] யோனிவழி மீயொலிச் சோதனை, குறுக்குவெட்டு வரியோட்டப் படம் ஆகியவை மூலம் நோய் கண்டறியப்படுகிறது. ஆனால் இவையே நோய்க்கண்டறிவதற்கான முற்றிலும் சரியான வழியல்ல.[2] அறுவை சிகிச்சை மட்டுமே துல்லியமான நோய்க்கண்டறிதல் முறையாகும்.S[2]

அறுவை சிகிச்சை மூலம் சூல்பை முறுக்கத்தை நீக்கலாம் அல்லது சூல்பையை அதனிடத்தில் சரியாகப் பொருத்தலாம் அல்லது அதனை நீக்கிவிடலாம்.[1][2] நீண்டகாலமாக இது நீடித்தாலும் கூட அடிக்கடி இதனை சரிசெய்துகொள்ளலாம்.[5] முன்பே கருப்பை முறுக்கமுடையவர்களில் கூட 10% பேர் மட்டுமே இதனால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது..[4] நோய்க்கண்டறிதலானது ஒப்பீட்டளவில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. 1,00,000 பெண்களில் 6 விழுக்காடு பெண்கள் ஆண்டுதோறும் இதனால் பாதிப்புக்குள்ளாகின்றனர்T.[2] சூல்பை முறுக்கமானது பொதுவாக இனப்பெருக்க வயதுக் காலங்களில் எந்த வயதுப் பெண்களுக்கு வேண்டுமானாலும் இது நிகழக்கூடும்..[2] .

நோய் அறிகுறிகள்

தொகு

சூல்பை முறுக்கம் உள்ள நோயாளிகளுக்கு வழக்கமாக, கீழ் அடிவயிற்றில் ஒருபக்கமாக திடீரென கடுமையான வலி தோன்றும். 70% பேருக்கு இவ்வலியுடன் குமட்டலும் வாந்தியும் ஏற்படும்.[6]

நோய்க்கூறு உடலியல்

தொகு

சூலகத்தின் அதிக வளர்ச்சியானது அதன் முறுக்கத்துடன் தொடர்புடையது. இனப்பெருக்க வயதில் உடற்கூறியல் முனையங்களின் வளர்ச்சி இச்சுழற்சிக்கான ஆபத்தான காரணியாகும். முறுக்கத்திற்கான பொதுவான காரணி சூலகத்தில் சூலகக்கட்டிகளால் ஏற்படும் பாதிப்பாகும். சூலக முறுக்கத்தினால் பால்லோப்பியன் குழாயும் அதனோடு சுற்றிப் படர்ந்து பரவியுள்ள கருப்பைத் தசைநார்களும் முறுக்கியபடி காணப்படும்.சில அரிதான நேரங்களில் இத்தசை நார்கள் சூலகத்துடன் 80 விழுக்காடு வலப்பக்கமாகச் சற்று மேலோங்கிக் காணப்படும்.

நோய்க் கண்டறிதல் s

தொகு

சூலக முறுக்கத்தைத் துல்லியமாகக் கண்டறிதல் கடினமானதாகும். நோயைக் கண்டறிவதற்கு முன் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மகப்பேறியல் மற்றும் பெண் மருத்துவயியல் ஆய்வு ஒன்றில் முன் அறுவை சிகிச்சை செய்து நோய்க்கண்டறியும் முறையில் 46% பெண்களுக்கு மட்டுமே சூலக முறுக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Adnexal Torsion". Merck Manuals Professional Edition. பார்க்கப்பட்ட நாள் 12 September 2018.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 Robertson, JJ; Long, B; Koyfman, A (April 2017). "Myths in the Evaluation and Management of Ovarian Torsion.". The Journal of emergency medicine 52 (4): 449-456. doi:10.1016/j.jemermed.2016.11.012. பப்மெட்:27988260. 
  3. 3.0 3.1 Asfour, V; Varma, R; Menon, P (2015). "Clinical risk factors for ovarian torsion.". Journal of obstetrics and gynaecology : the journal of the Institute of Obstetrics and Gynaecology 35 (7): 721-5. doi:10.3109/01443615.2015.1004524. பப்மெட்:26212687. 
  4. 4.0 4.1 Ros, Pablo R.; Mortele, Koenraad J. (2007). CT and MRI of the Abdomen and Pelvis: A Teaching File (in ஆங்கிலம்). Lippincott Williams & Wilkins. p. 395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781772372.
  5. 5.0 5.1 5.2 5.3 Wall, Ron (2017). Rosen's Emergency Medicine: Concepts and Clinical Practice (9 ed.). Elsevier. p. 1232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0323354790.
  6. Ovarian Torsion at eMedicine
  7. Bar-On, Shikma; Mashiach, Roy; Stockheim, David; Soriano, David; Goldenberg, Motti; Schiff, Eyal; Seidman, Daniel S. (2010). "Emergency laparoscopy for suspected ovarian torsion: are we too hasty to operate?". Fertility and Sterility 93 (6): 2012–5. doi:10.1016/j.fertnstert.2008.12.022. பப்மெட்:19159873. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்பை_முறுக்கம்&oldid=2749888" இலிருந்து மீள்விக்கப்பட்டது