சூழலியலும் சட்டமும்

உருசிய காலாண்டு இதழ்

சூழலியல் மற்றும் சட்டம் (Ecology and Law) என்பது நார்வே நாட்டில் உள்ள பெலோனோ சுற்றுச்சூழல் உரிமைகள் மையத்தின் செயிண்ட் பீட்டர்சுபர்க் கிளையால் வெளியிடப்பட்ட ஒரு காலாண்டு இதழாகும் . லினா கிரெய்ன் 2008 ஆம் ஆண்டு முதல் இதன் தலைமை பத்திரிகை ஆசிரியராக இருந்து வருகிறார். [1] 2002 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியது.

சூழலியலும் சட்டமும்
தலைமை தொகுப்பாசிரியர்லீனா கிரெயின்
முன்னாள் இதழாசிரியர்கள்எகோரெங்கோ அலெக்சாண்டர்
இடைவெளிகாலாண்டு
வெளியீட்டாளர்பெல்லோனா – சென் பீட்டர்சுபெர்கு
தொடங்கப்பட்ட ஆண்டு2002
நாடுஉருசியா
அமைவிடம்சென் பீட்டர்சுபெர்கு
மொழிஉருசியம்
வலைத்தளம்ecopravo.info

நோக்கம்

தொகு

பத்திரிகையின் முக்கிய நோக்கம் உருசியாவில் "குடிமக்களின் சுற்றுச்சூழல் உரிமைகளைப் பாதுகாத்தல்" ஆகும். [1]

முன்னாள் ஆசிரியர்கள்

தொகு

பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் கிரிகோரி பாசுகோ ஆவார், 2002-2008 ஆம் ஆண்டு காலம் வரை இப் பதவியில் பணியாற்றினார். இவருக்குப் பின் எகோரெங்கோ அலெக்சாண்டர் பதவியேற்றார். பத்திரிகையின் வலைத்தளத்தின்படி, பாசுகோ 2002 ஆம் ஆண்டில் "உருசிய பசிபிக் கடற்படையின் கடற்படைத் தளங்களில் அணுசக்தி பாதுகாப்பை மீறிய வழக்குகளின் பாதுகாப்புக்காக" சிறையில் அடைக்கப்பட்டார். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "The Journal 'Ecology and Law'", Bellona Foundation, Saint Petersburg, Russia (in Russian). Retrieved 25 June 2012.

 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழலியலும்_சட்டமும்&oldid=3304096" இலிருந்து மீள்விக்கப்பட்டது