சென் பீட்டர்சுபெர்கு

Map சென் பீட்டர்சுபெர்கு (Saint Petersburg; உருசியம்: Санкт-Петербург, ஒ.பெ Sankt-Peterburg, பஒஅ[ˈசாங்க்த் பித்தர்பூர்க்]( கேட்க)), முன்னர் பெத்ரோகிராது (Petrograd, Петроград) (1914–1924), பின்னர் இலெனின்கிராது (Leningrad, Ленинград) (1924–1991), என்பது உருசியாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பால்ட்டிக்கு கடலின் கரையோரப் பகுதியில், பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே அமைந்துள்ளது. 5.3 மில்லியன் மக்கள் (2018 தரவுகள்) வாழும் இந்நகர் ஐரோப்பாவின் நான்காவது செறிவு கூடிய நகரமாகும்.[8] பால்ட்டிக் கடலின் முக்கிய உருசியத் துறைமுகமாகவும் இது விளங்குகிறது. இது உருசியாவின் ஒரு நடுவண் அமைப்பாகும்.

சென் பீட்டர்சுபெர்கு
Санкт-Петербург
Saint Petersburg
மேலிடது மூலையில் இருந்து மணிக்கூட்டுத் திசையில்: அரண்மனைப் பாலம், பீட்டர், பவுல் கோட்டை, செனெட் சதுக்கம், நேவா ஆறு, திரித்துவப் பேராலயம், பொது அதிகாரிகள் கட்டடம்
மேலிடது மூலையில் இருந்து மணிக்கூட்டுத் திசையில்: அரண்மனைப் பாலம், பீட்டர், பவுல் கோட்டை, செனெட் சதுக்கம், நேவா ஆறு, திரித்துவப் பேராலயம், பொது அதிகாரிகள் கட்டடம்
சென் பீட்டர்சுபெர்கு-இன் கொடி
கொடி
சென் பீட்டர்சுபெர்கு-இன் சின்னம்
சின்னம்
ஆள்கூறுகள்: 59°56′15″N 30°18′31″E / 59.93750°N 30.30861°E / 59.93750; 30.30861
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வடமேற்கு[1]
பொருளாதாரப் பகுதிவடமேற்கு[2]
அரசு
 • நிர்வாகம்சட்டமன்றம்
 • ஆளுநர்அலெக்சாந்தர் பெக்லோவ்
பரப்பளவு
 • மொத்தம்1,439 km2 (556 sq mi)
 • பரப்பளவு தரவரிசை82-ஆவது
மக்கள்தொகை
 • மதிப்பீடு 
(2018)[4]
53,51,935
நேர வலயம்ஒசநே+3 (ஒசநே+03:00 Edit this on Wikidata[5])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-SPE
அனுமதி இலக்கத்தகடு78, 98, 178, 198
OKTMO ஐடி40000000
அலுவல் மொழிகள்உருசியம்[6]
இணையதளம்http://gov.spb.ru

இந்நகரம் உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரால் 27 மே [யூ.நா. 16 மே] 1703 இல் ஒரு கப்பற்றப்பட்ட சுவீடிய கோட்டையின் மீது நிறுவப்பட்டது. 1713 முதல் 1918 வரை உருசியாவின் சாராட்சியினதும், பின்னர் உருசியப் பேரரசினதும் தலைநகராக விளங்கியது. (1728 முதல் 1730 வரை இரண்டாண்டுகள் மாஸ்கோ தற்காலிகத் தலைநகராக இருந்தது). அக்டோபர் புரட்சியின் பின்னர், போல்செவிக் தமது அரசை மாஸ்கோவில் நிறுவினர்.[9]

இன்றைய நவீன காலத்தில், சென் பீட்டர்சுபெர்கு வடக்குத் தலைநகர் எனக் கருதப்படுகிறது. பல நடுவண் அரசு நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன. உருசியத் தேசிய நூலகம், உருசியக் கூட்டமைப்பின் மீயுயர் நீதிமன்றமும் அமைந்துள்ளது. சென் பீட்டர்சுபெர்கு நகரம் உருசியாவின் கலாசாரத் தலைநகராகவும் கருதப்படுகிறது.[10] உலகின் மிகப்பெரும் ஓவியக் காட்சியகங்களில் ஒன்றான ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் இங்குள்ளது.[11]

வரலாறு

தொகு

ஸார் பீட்டர் பெருமகனரால் சுபானு ஆண்டு வைகாசி மாதம் 17ம் நாள் (27 மே 1703), திங்கட்கிழமையன்று சென் பீட்டர்ஸ்பேர்க் என்ற பெயரிட்டு நிறுவினார். மேலும் ருசியப் பேரரசின் தலைநகராக இருநூற்றாண்டுகளுக்கு மேலாக (1712–1728, 1732–1918) இருந்தது. 1917 ஆண்டில் நடந்த ருசியப் புரட்சிக்கு பின்னர், 1918ம் ஆண்டிலிருந்து தலைநகரை மாற்றியது ருசியப் பேரரசு.

மக்கள் தொகை

தொகு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உருசியாவின் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. 2017 ஆம் ஆண்டின் ரோஸ்டாடின்படி சென் பீட்டர்ஸ்பேர்கின் மொத்த மக்கள்தொகை 5,281,579 அல்லது ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையில் 3.6% ஆகும். இது 2010 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 4,879,566 (3.4%) ஆகவும் மற்றும் 1989 கணக்கெடுப்பின்படி பதிவு செய்யப்பட்ட 5,023,506 ஆகவும் இருந்தது. 2010 ஆம் ஆண்டு மக்கள்தொகை இன ரீதியான கணக்கெடுப்பு : ரஷ்யர்கள் 80.1%, உக்ரேனியர்கள் 1.3%, பெலாரியர்கள் 0.8%, தாடார் 0.6%, ஆர்மீனியர்கள் 0.6%, யூதர்கள் 0.5%, உஸ்பெகியர்கள் 0.4%, தாஜிக்கியர்கள் 0.3%, அஜெரியர்கள் 0.3%, ஜோர்ஜியர்கள் 0.2%, மோல்டோவியர்கள் 0.2%, ஃபின்ஸ் 0.1%, மற்றவை - 1.3%. மீதமுள்ள 13.4% இன மக்கள் குறிப்பிடப்படவில்லை.

20 ஆம் நூற்றாண்டின் போது, நகரம் வியத்தகு மக்கள் தொகை மாற்றங்களை அனுபவித்தது. 1916 இல் இருந்த 2.4 மில்லியன் மக்கள் தொகை 1917 ரஷ்ய புரட்சியாலும் ரஷ்ய உள்நாட்டு யுத்தத்தினாலும் 740,000 க்கும் குறைவாக குறைந்தது.

புவி அமைப்பு

தொகு

நகரின் மொத்த பரப்பளவு, 605.8 சதுர கிலோமீட்டர்கள் (233.9 sq mi)வாக உள்ளது. ஒருங்கிணைந்த நகராக ​ஒன்பது நகராட்சி நகரங்கள் மற்றும் இருபத்தியொரு நகர குடியேற்றங்களை கொண்டு 1,439 சதுர கிலோமீட்டர்கள் (556 sq mi)வாக உள்ளது.

காலநிலை

தொகு

சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை, ஈரப்பத தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இங்குள்ள நேவா ஆறு, உறைபனியால் மூடியிருக்கும். நகரில் சராசரியாக 135 நாட்கள், உறைபனி இல்லாத காலமாக நீடிக்கிறது. நகரின் புறநகர் பகுதிகளைவிட சற்று வெப்பமான காலநிலையை கொண்டிருக்கிறது. வானிலையானது ஆண்டு முழுவதும் மாறி மாறி வரும்[12][13].

தட்பவெப்ப நிலைத் தகவல், சென் பீட்டர்ஸ்பேர்க்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 8.7
(47.7)
10.2
(50.4)
14.9
(58.8)
25.3
(77.5)
30.9
(87.6)
34.6
(94.3)
35.3
(95.5)
37.1
(98.8)
30.4
(86.7)
21.0
(69.8)
12.3
(54.1)
10.9
(51.6)
37.1
(98.8)
உயர் சராசரி °C (°F) -3.0
(26.6)
-3.0
(26.6)
2.0
(35.6)
9.3
(48.7)
16.0
(60.8)
20.0
(68)
23.0
(73.4)
20.8
(69.4)
15.0
(59)
8.6
(47.5)
2.0
(35.6)
-1.5
(29.3)
9.1
(48.4)
தினசரி சராசரி °C (°F) -5.5
(22.1)
-5.8
(21.6)
-1.3
(29.7)
5.1
(41.2)
11.3
(52.3)
15.7
(60.3)
18.8
(65.8)
16.9
(62.4)
11.6
(52.9)
6.2
(43.2)
0.1
(32.2)
-3.7
(25.3)
5.8
(42.4)
தாழ் சராசரி °C (°F) -8.0
(17.6)
-8.5
(16.7)
-4.2
(24.4)
1.5
(34.7)
7.0
(44.6)
11.7
(53.1)
15.0
(59)
13.4
(56.1)
8.8
(47.8)
4.0
(39.2)
-1.8
(28.8)
-6.1
(21)
2.7
(36.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -35.9
(-32.6)
-35.2
(-31.4)
-29.9
(-21.8)
-21.8
(-7.2)
-6.6
(20.1)
0.1
(32.2)
4.9
(40.8)
1.3
(34.3)
-3.1
(26.4)
-12.9
(8.8)
-22.2
(-8)
-34.4
(-29.9)
−35.9
(−32.6)
பொழிவு mm (inches) 44
(1.73)
33
(1.3)
37
(1.46)
31
(1.22)
46
(1.81)
71
(2.8)
79
(3.11)
83
(3.27)
64
(2.52)
68
(2.68)
55
(2.17)
51
(2.01)
661
(26.02)
ஈரப்பதம் 86 84 79 69 65 69 71 76 80 83 86 87 78
சராசரி மழை நாட்கள் 9 7 10 13 16 18 17 17 20 20 16 10 173
சராசரி பனிபொழி நாட்கள் 25 23 16 8 1 0.1 0 0 0.1 5 16 23 117
சூரியஒளி நேரம் 21.7 53.7 124.0 180.0 260.4 276.0 266.6 213.9 129.0 71.3 24.0 12.4 1,633.0
Source #1: Pogoda.ru.net[14]
Source #2: HKO (sunshine hours)[15]

போக்குவரத்து

தொகு

சென் பீட்டர்ஸ்பேர்க்கானது, போக்குவரத்தின் முனையமாக உள்ளது. ரஷ்ய தொடர்வண்டி நிலையமானது, 1837 முதன் முதலாக கட்டப்பட்டது. அதன் பின்னர் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பானது அசுர வேகத்துடன் வளர்ச்சி பெற்றது. டிராம், மெட்ரோ, உள்ளூர் மேம்பாட்டுச் சாலைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என பல போக்குவரத்து சாதனங்கள் தன்னகத்தே அடக்கியுள்ளது. நகரானது, தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மற்றும் சர்வதேச தொடருந்துத் தடங்கள் மூலம் ரஷ்யா முழுவதும் பரந்த உலகுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சென் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ வரைபடம்
 

தொடருந்து

தொகு

1851ம் ஆண்டு மாஸ்கோவையும் சென் பீட்டர்ஸ்பேர்க்கையும் இணைக்கும் 651 கிலோமீட்டர்கள் (405 mi) நீளம் கொண்ட தெடருந்து தடத்தின் மூலம் பயணியர், மூன்றரை மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்குள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் சென்றுவிடலாம்[16].

முக்கிய தொடருந்து முனையங்கள்

வானூர்தி

தொகு

புல்கோவா பன்னாட்டு விமான நிலையமே பிரதான நிலையமாக அமைந்துள்ளது[17]. இதற்கு அடுத்த நிலையாக மூன்று விமான நிலையஙகள் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர். நகரிலிருந்து விமான நிலையத்திற்கு, 24 மணிநேரமும் பேருந்து சேவையுள்ளது.

 
அரண்மனை

நகரமைப்பு

தொகு
 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மூன்று வானளாவியங்கள் உள்ளன: லீடர் டவர் (140 மீ), அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி (124 மீ) மற்றும் அட்லாண்டிக் சிட்டி (105 மீ). இம்மூன்று இடங்களும் வரலாற்று மையங்களில் இருந்து தொலைவில் உள்ளன.310 மீட்டர் (1,020 அடி) உயரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டிவி கோபரம் நகரத்தில் மிக உயரமான கட்டடம் ஆகும். மாஸ்கோவிலுள்ளது போலல்லாமல், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் பரோக் மற்றும் நியோகிளாசிக்கல் கட்டிடங்களை உள்ளடக்கிய நகர மையத்தின் வரலாற்று கட்டமைப்பு, பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது; எனினும் லெனின்கிராட் முற்றுகை மற்றும் போல்ஷிவிக்குகள் அதிகாரம் கைப்பற்றியபின்பும் பல கட்டிடங்கள் இடிந்துபோனது. பீட்டர் மற்றும் பால் கோட்டை, பீட்டர் மற்றும் பால் தேவாலயம் ஆகியவற்றுடன் இணைந்து நெவா ஆற்றின் வலது கரையிலுள்ள ஜயச்சி தீவில் அமைந்துள்ளது. 1913 இல் திறக்கப்பட்ட போது ஐரோப்பாவின் மிகப்பெரிய மசூதியாக இருந்த செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மசூதி அருகிலுள்ள வலதுபுற கரையில் அமைந்துள்ளது. டிரினிட்டி கதீட்ரல், மரின்ச்கி அரண்மனை, ஹோட்டல் அஸ்டோரியா, பிரபலமான மாரின்ஸ்கி நாடக அரங்கம், நியூ ஹாலந்து தீவு, செயிண்ட் இசாக்ஸ் கதீட்ரல் (நகரத்தின் மிகப்பெரியது) மற்றும் செனட் சதுக்கத்தில் அடங்கும் பல குறிப்பிடத்தக்க அடையாளங்கள் கடற்படை நிர்வாகக்குழு கட்டிடத்தின் மேற்கே மற்றும் தெற்கே அமைந்துள்ளது.

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு

தொகு

அனைத்து முக்கிய ரஷ்ய செய்தித்தாள்கள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செயலில் உள்ளன. இந்நகரம் தொலைத்தொடர்பு அமைப்பில் அதித வளர்ச்சி பெற்றுள்ளது . நகரத்தில் பெறக்கூடிய தொலைக்காட்சி நெட்வொர்க்குகள்:

  1. சேனல் ஒன்
  2. ரஷ்யா-1
  3. ரஷ்யா-2
  4. NTV,
  5. டிவி செந்தர்
  6. சேனல் 5
  7. ரஷ்யா-கே
  8. ரஷ்யா-24
  9. ரஷ்யாவின் பொது தொலைக்காட்சி
  10. ரென் டிவி
  11. எஸ்டிஎஸ்
  12. டிஎன்டி
  13. டிவி-3
  14. பெரட்சே
  15. ஈரோ நியூஸிற்கு
  16. 2x2
  17. டிஸ்னி சேனல்

மற்றும் பல.

கல்வி

தொகு

2006/2007 வரை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 1024 மழலையர் பள்ளி, 716 பொதுப் பள்ளிகள் மற்றும் 80 தொழிற்கல்வி பள்ளிகள் இருந்தன. [பொது உயர் கல்வி நிறுவனங்களில் மிகப் பெரியது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி, ஏறத்தாழ 32,000 இளங்கலை மாணவர்களை சேர்ப்பது;மிகப்பெரிய அரசு சாராத உயர் கல்வி நிறுவனம் சர்வதேச பொருளாதார உறவுகள், பொருளாதாரம் மற்றும் சட்ட நிறுவனம் ஆகும். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம், ஹெர்ஜன் பல்கலைக்கழகம், பொருளியல் மற்றும் நிதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகம் மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் இராணுவ பொறியியல்-தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை பிற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் ஆகும்.

பிரபலமான மக்கள்

தொகு

செயிண்ட் பீட்டர்சுபர்கில் பிறந்த அல்லது வாழ்ந்த பிரபலங்கள்:

சான்றுகள்

தொகு
  1. Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
  2. Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
  3. Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation)". Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  4. Error: Unable to display the reference properly. See the documentation for details.
  5. "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
  6. Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
  7. Official website of St. Petersburg. St. Petersburg in Figures பரணிடப்பட்டது 19 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
  8. "Saint Petersburg, Russia - Image of the Week - Earth Watching". earth.esa.int. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
  9. McColl, R.W., ed. (2005). Encyclopedia of world geography. Vol. 1. New York: Infobase Publishing. pp. 633–634. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-5786-3. பார்க்கப்பட்ட நாள் 9 February 2011.
  10. V. Morozov. The Discourses of Saint Petersburg and the Shaping of a Wider Europe, Copenhagen Peace Research Institute, 2002. பன்னாட்டுத் தர தொடர் எண் 1397-0895
  11. "Exploring St. Petersburg / The Hermitage". Geographia.com. 6 January 1990. பார்க்கப்பட்ட நாள் 25 January 2010.
  12. "Climate St. Peterburg - Historical weather records". Tutiempo.net. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  13. "Архив погоды в Санкт-Петербурге, Санкт-Петербург". Rp5.ru. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  14. "Pogoda.ru.net" (in Russian). Weather and Climate (Погода и климат). பார்க்கப்பட்ட நாள் March 29, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  15. "சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை பற்றிய குறிப்புகள், ருசியா". ஹாங்காங் ஆய்வுக்கூடம். Archived from the original on அக்டோபர் 10, 2018. பார்க்கப்பட்ட நாள் March 29, 2013.
  16. "Results of train ticket inquiry, Russian train schedules and Russian train tickets". RZD.com. Archived from the original on அக்டோபர் 11, 2018. பார்க்கப்பட்ட நாள் January 1, 2011.
  17. "Россия - российские авиалинии". Rossiya-airlines.com. 2007-07-25. பார்க்கப்பட்ட நாள் 2012-11-16.
  18.   Bain, Robert Nisbet (1911). "Ivan". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 15. 87–91; see page 91. 
  19.   Phillips, Walter Alison (1911). "Nicholas I.". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19.  
  20.   Wallace, Donald Mackenzie (1911). "Alexander III. (tsar)". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 1. 561–563. 
  21.    "Nicholas II.". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. (1911). 
  22.    "Euler, Leonhard". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 9. (1911). 887–889. 
  23.   Morfill, William Richard (1911). "Pushkin, Alexander". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 22. 668–669. 
  24.   Seccombe, Thomas (1911). "Dostoievsky, Feodor Mikhailovich". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 8. 438–439. 
  25.    "Tschaïkovsky, Peter Ilich". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911). 348–349. 
  26.   Author:Vladimir Ilyich Lenin. Wikisource. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_பீட்டர்சுபெர்கு&oldid=3727858" இலிருந்து மீள்விக்கப்பட்டது