அலெக்சாந்தர் பிரீடுமேன்

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் (Alexander Alexandrovich Friedmann, உருசியம்: Алекса́ндр Алекса́ндрович Фри́дман) (17 சூன் 1888 - 16 செப்டம்பர் 1925) ஓர் உருசிய சோவியத் இயற்பியலாளரும், கணிதவியலாளரும் ஆவார். இவர் முன்னோடியாக உருவாக்கிய விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்றார். இவை பிரீடுமேன் சமன்பாடுகள் என இப்போது அழைக்கப்படுகின்றன.

அலெக்சாந்தர் பிரீடுமேன்
Alexander Friedmann
பிறப்புஅலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன்
(1888-06-16)சூன் 16, 1888
சென் பீட்டர்ஸ்பேர்க்
இறப்புசெப்டம்பர் 16, 1925(1925-09-16) (அகவை 37)
சென் பீட்டர்ஸ்பேர்க்
தேசியம்உருசியர்
துறைகணிதம், இயற்பியல்
பணியிடங்கள்பெர்ம் அரசுப் பல்கலைக்கழகம்
பெத்ரோகிராத் பல்தொழினுட்பக் கழகம்
மெயின் நிலவியற்பியல் வான்காணகம்
ஆய்வு நெறியாளர்விளாதிமிர் ஸ்டெக்லோவ்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஜார்ஜ் காமாவ்
நிக்கொலாய் கோச்சின்
பெலாகெயா பொலுபாரினோவா-கோச்சினா
அறியப்படுவதுபிரீடுமேன் சமன்பாடுகள்
பிரீடுமேன்-லெமாய்த்தர்-ராபர்ட்சன்-வாக்கர் மெத்திரிக்கு
துணைவர்நத்தாலியா மலீனினா

இளமைப் பருவம்

தொகு

அலெக்சாந்தர் பிரீடுமேன் இசை, நடனக் கலைஞரான அலெக்சாந்தர் பிரீடுமேனுக்கும் பியானோ கலைஞர் உலூத்மிலா இக்னத்தியேவ்னா வொயாச்செக் என்பவருக்கும் புனித பீட்டர்சுபேர்கு நகரில் பிறந்தார்.[1] இவர் குழந்தையாக இருந்தபோதே உருசிய மரபுவழி மாதாக்கோயிலில் திருமுழுக்கு செய்விக்கப்பட்டுள்ளார். வாழ்நாளின் பெரும்பகுதியைப் புனித பீட்டர்சுபர்கில் கழித்துள்ளார்.

இவர் புனித பீட்டர்சுபர்க் அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று 1910 இல் பட்டம் பெற்றார். பிறகு புனித பீட்டர்சுபர்க் சுரங்க கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

பிரீடுமேன் பள்ளியில் இருந்தே யாக்கோபு தமார்க்கின் என்பவருடன் இணைபிரியா நட்போடு இருந்தார். பின்னாட்களில் இந்த யாக்கோபு தமார்க்கின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற கணிதவியலாரில் ஒருவரானார்.[2]

முதலாம் உலகப் போர்

தொகு

பிரீடுமேன் உருசியப் பேரரசுக்காக வான்படை வீரராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். முதல் உலகப் போரின் போது உருசியா சார்பில் சண்டையிட்டார். உருசியப் புரட்சிக்குப் பிறகு வானூர்திக் குழுமத்தின் தலைவர் ஆனார்.[3]

பேராசிரியர் தகைமை

தொகு

பிரீடுமேன் 1918 இல் பெர்ம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். இவர் 1922 இல் விரிவடையும் அண்டம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்தினார். பின்னர் 1927 இல் பெல்ஜிய வானியலாளர் ஜார்ஜசு இலெமைத்ரேயும் தனித்து தானும் இதே கண்ணோட்டத்துக்கு வந்துள்ளனர்.[4]

இவர் 1925 சூனில் இலெனின்கிராதில் இருந்த முதன்மை புவியியற்பியல் காணகத்துக்கு இயக்குநராக அமர்த்தப்பட்டுள்ளார். 1925 சூலையில் ஒரு வளிமக்கலன் ஆய்வில் பங்கேற்று 7400 மீ (24,300 அடி) உயரத்தில் இருந்து புவி குறித்த நோக்கீடுகளை எடுத்து வரலாறு காணாத புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.[5]

பணிகள்

தொகு

சார்புடைமை

தொகு

அவார்டு பெர்சி இராபெர்ட்சனும், ஆர்தர் ஜெப்ரி வாக்கரும் தம் ஆய்வுகளை வெளியிடுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே, "Über die Möglichkeit einer Welt mit konstanter negativer Krümmung des Raumes" ("மாறாத எதிர்வளைமை உள்ள வெளியமைந்த உலகத்துக்கான வாய்ப்புகள்") என்ற ஆய்வுட்பட்ட பிரீடுமேனின் ஆய்வுகள் Zeitschrift für Physik (Vol. 21, pp. 326–332) எனும் செருமானிய இதழில் 1925 சூன் திங்களில் வெளியிடப்பட்டமை, அவர் புடவி சார்ந்த நேர், சுழி, எதிர் வளைமைப் படிமங்கள் குறித்த புரிதலைக் கைவரப் பெற்றிருந்தமைக்கான செயல்விளக்கமாக அமைந்தது.

இந்தப் பொதுச் சார்பியலுக்கான அண்ட இயங்கியல் படிமங்கள் பெரு வெடிப்புக் கோட்பாடு, நிலைத்த நிலைக் கோட்பாடு ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கும் தேவைப்பட்ட செந்தர வடிவங்களாகும். இவரது பணி இருகோட்பாடுகளையும் சமமாகத் தாங்கிப்பிடித்தது. இருந்தாலும், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே பெருவெடிப்புக் கோட்பாடு ஏற்கப்பட்டு மற்றது தள்ளப்பட்டது.

ஐன்ன்ஸ்டைனின் புலச் சமன்பாடுகளுக்கான செவ்வியல் தீர்வு ஓர் ஒருபடித்தான சமச்சீர்மை அண்டம் ஆகும். இது பிரீடுமேன்-இலாமைத்ரே-இராபெட்சன்-வாக்கர் வெளி]] என இப்போது அழைக்கப்படுகிறது. பிரீடுமேனுக்குப் பிறகே மற்ற மூவரும் 1920களிலும் 1930களிலும் இந்தச் சிக்கலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தனித்தனியாக இதே தீர்வைக் கண்டடைந்தனர்.

நீரியங்கியலும் வானிலையியலும்

தொகு

பொது சார்புடைமையைத் தவிர, நீரியங்கியலிலும், வானிலையியலிலும் அவருக்கு ஆர்வமிருந்தது.

சொந்த வாழ்க்கை

தொகு

இவர் 1911 இல் எகதெரீனா தரோஃபெயேவைத் திருமணம் செய்து கொண்டார். பிறகு மணவிலக்கும் பெற்றார். இவர் தனது வாழ்க்கையின் கடைசியில் நதால்யா மாலிநினாவை மணம்புரிந்தார். அவர்கள் இருவருமே சமய நம்பிக்கையற்றவர்கள் என்றாலும் திருமணத்தைச் சமய முறையிலேயே செய்துக்கொண்டனர்.[6]

இறப்பு

தொகு

பிரீடுமேன் 1925 செப்டம்பர், 16 ஆம் நாளன்று 37 அகவையில் என்புருக்கிக் காய்ச்சலில் இறந்தார். இது அவர் கிரிமியாவில் விடுமுறையில் இருந்து திரும்பியபோது ஏற்பட்டதாகும்.[5]

பிரீடுமேன் நினைவுப் பெயரீடுகள்

தொகு

இவரது நினைவாக நிலாவின் எரிமலைவாய் ஒன்று பிரீடுமேன் எரிமலைவாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அலெக்சாந்தர் பிரீடுமேன் பன்னாட்டுக் கருத்தரங்கம்

தொகு

அலெக்சாந்தர் பிரீடுமேனின் பன்னாடுக் கருத்தரங்கம் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து நிகழும் அறிவியல் நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம், சார்பியல், ஈர்ப்பு, அண்டவியல், மேலும் இவைசார்ந்த புலங்களில் பணிபுரியும் அறிவியலார்களிடையே தொடர்பை ஏற்ப்டுத்துவதே ஆகும். முதல் ஈர்ப்பு, அண்டவியல் சார்ந்த இக்கருத்தரங்கம் அவரது நூற்றாண்டு நினைவாக 1988 இல் நடந்தது.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்

தொகு
  • Friedman, A. (1922). "Über die Krümmung des Raumes". Zeitschrift für Physik 10 (1): 377–386. doi:10.1007/BF01332580. Bibcode: 1922ZPhy...10..377F. . இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு: எஆசு:10.1023/A:1026751225741
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by handஇல் உள்ளது. இந்த ஆய்வுரையின் முதல் (மூல) உருசியக் கையெழுத்துப்படி Ehrenfest archive என்ற இணைய தளத்தில் அவரது வெளியிடப்படாத பிறபணிகள், கடிதங்களுடன் காக்கப்பட்டு வருகிறது.
  • Friedman, A. (1924). "Über die Möglichkeit einer Welt mit konstanter negativer Krümmung des Raumes". Zeitschrift für Physik 21 (1): 326–332. doi:10.1007/BF01328280. Bibcode: 1924ZPhy...21..326F. . English translation in: எஆசு:10.1023/A:1026755309811
    This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand

மேற்கோள்கள்

தொகு
  1. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  2. Pyenson L. Book review. Physics Today [serial online]. September 1994; 47(9):93. Available from: MasterFILE Premier, Ipswich, MA. Accessed October 18, 2012.
  3. Pyenson L. Book review. Physics Today [serial online]. September 1994;47(9):93. Available from: MasterFILE Premier, Ipswich, MA. Accessed October 18, 2012.
  4. Daintith J. Dictionary Of Scientists [e-book]. Oxford University Press; 1999. Available from: eBook Collection (EBSCOhost), Ipswich, MA. Accessed October 18, 2012.
  5. 5.0 5.1 Davidson et al., A Voyage Through Turbulence, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521149310, September 2011 (for a partial and legal excerpt of the book, see: [1])
  6. Eduard A. Tropp, Viktor Ya. Frenkel, Artur D. Chernin (2006). "The final year". Alexander A Friedmann: The Man who Made the Universe Expand. Cambridge University Press. p. 209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521025881.

நூல்தொகை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு