வானிலையியல்

வானிலையைப் பற்றி படிக்கும் ஒரு படிப்பு

வானிலையியல் என்பது வளிமண்டலம் தொடர்பான அறிவியல் துறை ஆகும். இத்துறை தொடர்பான ஆய்வுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடையவை எனினும், 18 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் பல நாடுகளையும் தழுவிய கவனிப்பு வலையமைப்புக்கள் உருவானதோடு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கணனித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளைத் தொடர்ந்து காலநிலை முன்னறிவிப்பில் பெரிய முன்னேற்றங்களைக் காண முடிந்தது.[1]

வானிலையியல் தோற்றப்பாடுகள் என்பன, வானிலை அறிவியலுக்குத் தெளிவைக் கொடுப்பனவும், அந்த அறிவியலால் விளக்கப்படுவதுமான கவனிக்கத்தக்க வானிலை நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள், வளிமண்டலத்தில் காணப்படும் வெப்பநிலை, வளியமுக்கம், ஈரப்பதன் என்பவற்றாலும், அவற்றின் மாறல் வீதம், அவற்றிடையேயான இடைவினைகள், காலத்தோடு அவை மாறும் விதம் என்பவற்றாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானிலையியல்&oldid=3698014" இலிருந்து மீள்விக்கப்பட்டது