நிக்கோலே சினின்
நிக்கோலே நிக்கோலேவிச் சினின் (Nikolay Nikolaevich Zinin) உருசியாவைச் சேர்ந்த கரிம வேதியியலாளர் ஆவார். 1812 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் இவர் அசர்பைசானிலுள்ள சூசா நகரத்தில் பிறந்தார்.
நிக்கோலே நிக்கோலேவிச் சினின் Nikolay Nikolaevich Zinin | |
---|---|
நிக்கோலே சினின் | |
பிறப்பு | சூசா நகரம், அசர்பைஜான், உருசியப் பேரரசு | 25 ஆகத்து 1812
இறப்பு | 18 பெப்ரவரி 1880 சென் பீட்டர்சுபெர்கு, உருசியா | (அகவை 67)
தேசியம் | உருசியன் |
பணியிடங்கள் | கசான் பல்கலைக்கழகம் செயின்ட் பீட்டர்சுபெர்கு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கசான் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | இயசுடசு லிபெக்கு |
முனைவர் பட்ட மாணவர்கள் | அலெக்சாண்டர் போரொதின் அலெக்சான்டர் பட்லெரோவ் |
வாழ்க்கை
தொகுஉருசியாவின் கசான் நகரத்திலுள்ள கசான் பல்கலைக்கழகத்தில் சிரின் படித்தார. அங்கு கணிதத்தில் பட்டம் பெற்றார் ஆனால் 1835 ஆம் ஆண்டில் வேதியியல் கற்பிக்கத் தொடங்கினார். திறமைகளை மேம்படுத்துவதற்காக ஐரோப்பாவில் சிறிது காலம் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க இவர் 1838 மற்றும் 1841 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அங்கு படித்தார். செருமன் நாட்டிலுள்ள கீசன் நகரில் இயசுடசு லிபிக்குடன் சேர்ந்து சினின் படித்தார். அங்கு பென்சோயின் ஒடுக்கம் குறித்த தனது ஆராய்ச்சியை முடித்தார், இது பல ஆண்டுகளுக்கு முன்பே லிபிக் கண்டுபிடித்த வேதி வினையாகும்.[1][2] தான் முனைவர் பட்டம் பெற்ற செயிண்ட் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் சினின் தனது ஆராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்தார். கசான் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த சினின் சினின் 1847 ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்திற்காக அங்கிருந்து வெளியேறினார். செயிண்ட் பீட்டர்சுபர்க் அறிவியல் கழகத்தின் உறுப்பினராகவும் உருசிய இயற்பியல் மற்றும் வேதியியல் சமூகத்தின் முதலாவது தலைவராகவும் சினின் இருந்துள்ளார்.[3]
புகழ்பெற்ற சுவீடன் நாட்டு அறிவியலாளர் ஆல்பிரட் நோபலின் இளம் பருவத்தில் சினின் அவருக்கு தனி ஆசிரியராக கற்பித்துள்ளார்.
பணிகள்
தொகுசினின் வினை அல்லது சினின் குறைப்பு வினை என்ற பெயர் வினைக்காக இவர் நன்கு அறியப்படுகிறார்.[4] இவ்வினையில் நைட்ரோபென்சீன் போன்ற நைட்ரோ அரோமாட்டிக்கு பொருட்கள் அமோனியம் சல்பைடுகளுடன் சேர்க்கப்பட்டு குறைத்தல் வினை மூலம் அமீன்களாக மாற்றப்படுகின்றன.[5][6] 1842 ஆம் ஆண்டு அனிலினை அடையாளம் காண்பதில் சினின் முக்கிய பங்கு வகித்தார்.
1880 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 அன்று உருசியாவின் செயிண்ட் பீட்டர்சுபர்க்கில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Zinin, N. (1839). "Beiträge zur Kenntniss einiger Verbindungen aus der Benzoylreihe" (in German). Annalen der Pharmacie 31 (3): 329–332. doi:10.1002/jlac.18390310312. https://zenodo.org/record/1426941/files/article.pdf.
- ↑ Zinin, N. (1840). "Ueber einige Zersetzungsprodukte des Bittermandelöls" (in German). Annalen der Pharmacie 34 (2): 186–192. doi:10.1002/jlac.18400340205. https://zenodo.org/record/1426951.
- ↑ Vinogradov, S. N. (1965). "Chemistry at Kazan University in the Nineteenth Century: A Case History of Intellectual Lineage". Isis 56 (2): 168–173. doi:10.1086/349954.
- ↑ Porter, H. K. (1973). "The Zinin Reduction of Nitroarenes". Org. React. 20 (4): 455–481. doi:10.1002/0471264180.or020.04. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0471264180.
- ↑ Zinin, N. (1842). "Beschreibung einiger neuer organischer Basen, dargestellt durch die Einwirkung des Schwefelwasserstoffes auf Verbindungen der Kohlenwasserstoffe mit Untersalpetersäure" (in German). Journal für Praktische Chemie 27 (1): 140–153. doi:10.1002/prac.18420270125. https://zenodo.org/record/1427792.
- ↑ Richard Willstatter; Kubli, Heinrich (1908). "Über die Reduktion von Nitroverbindungen nach der Methode von Zinin" (in German). Berichte der deutschen chemischen Gesellschaft 41 (2): 1936–1940. doi:10.1002/cber.19080410273. https://zenodo.org/record/1426301.