சூழ்நிலைக் கோட்பாடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூழ்நிலைக் கோட்பாடு என்பது நாட்டுப்புறவியல் கோட்பாடுகளுள் ஒன்றாகும்.சமூக அறிவியல் துறைகளைச் சார்ந்தவர்களே இக்கோட்பாட்டில் ஆர்வமுடையவர்கள்.நாட்டுப்புற வழக்காற்றைச் சூழல்,வெளிப்படுத்தும் முறை,செயல்படும் முறை ஆகியவற்றுடன்இணைத்துக்காண முற்படுகின்றனர்.வெளிப்பாட்டு முறையை மொழியியலாளர்களிடமிருந்தும் செயல்பாட்டு முறையை மானிடவியலாளரிடமிருந்தும் தனிமனிதச் செயல்களைச் சமூகவியலாளரிடமிருந்தும் தனிமனிதச் செயல்பாட்டு முறையை உளவியலாளரிடமிருந்தும் பெற்று ஆய்வில் பயன்படுத்துகின்றனர்.