நாட்டுப்புறவியல் கோட்பாடுகள்

நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் என்பது, நாட்டுப்புறவியல் ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருக்கின்ற கோட்பாடுகள் ஆகும். ஒரு காலத்தில், நாட்டுப்புறவியலில் ஆர்வமுள்ளவர்கள் கோட்பாடுகளைப்பற்றி அக்கறை கொள்ளாதவர்களாக இருந்தார்கள். பிரித்தானியாவின் நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் கோட்பாடுகளில் அதிகம் கவனமெடுக்கவில்லை. 20 ஆம் நூற்றாண்டின் 80கள் வரையான பிரித்தானிய நாட்டுப்புறவியல் ஆய்வில் இத்தகைய போக்கே காணப்பட்டது. எனினும், அமெரிக்காவில் இது தொடர்பான முன் முயற்சிகள் எடுக்கப்பட்டன. நாட்டுப் புறவியலின் பல்வேறு கூறுகளிலுமான ஆய்வுத்துறை விரிவடைந்து வருகின்ற இக்காலத்தில் ஆய்வாளர்கள், நாட்டுப் புறவியல் ஆய்வில் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளார்கள். இதன் காரணமாக நாட்டுப்புறவியல் ஆய்வு தொடர்பாகப் பல்வேறு கோட்பாடுகள் உருவாகியுள்ளன.

1972 ஆம் ஆண்டில் அமெரிக்க ஆய்வாளரான ரிச்சர்ட் எம். டார்சன் (Richard M. Dorson) என்பவர் பரவலாகப் புழக்கத்தில் உள்ள 12 வகையான ஆய்வுக் கோட்பாடுகளைப் பற்றித் தனது, நாட்டுப்புறவியலும், நாட்டுப்புற வாழ்க்கையும் (Folklore and Folklife) என்னும் நூலில் எடுத்தாண்டுள்ளார்.[1] இக் கோட்பாடுகளாவன:

  1. வரலாற்றுப் புவியியல் கோட்பாடு
  2. வரலாற்று மீட்டுருவாக்கக் கோட்பாடு
  3. கருத்தியல் கோட்பாடு
  4. செயல்திறன் கோட்பாடு
  5. உளவியல் பகுத்தாய்வுக் கோட்பாடு
  6. அமைப்பியல் கோட்பாடு
  7. வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு
  8. கலப்புப் பண்பாட்டுக் கோட்பாடு
  9. நாட்டுப்புறப் பண்பாட்டுக் கோட்பாடு
  10. மக்கட் பண்பாட்டுக் கோட்பாடு
  11. அரை உலகக் கோட்பாடு
  12. சூழ்நிலைக் கோட்பாடு

மேற்கோள்கள்

தொகு
  1. சக்திவேல் சு., 2004