சூழ் அழுத்தம்

சூழ் அழுத்தம் (Ambient pressure) என்பது ஒரு பொருளின் மீது அதனைச் சுற்றியுள்ள வளிமமோ நீர்மமோ செலுத்தும் அழுத்தம் ஆகும்.[1]

அழுத்தத்திற்கான அனைத்துலக முறை அலகு பாஸ்கல் ஆனது மிகவும் சிறியதான ஒன்று என்பதால் பொதுவாகப் பூமியின் சூழ் அழுத்தம் கிலோ பாஸ்கல் அலகு கொண்டு குறிக்கப்படும். பருவநிலை மாற்றங்கள் காரணமாகக் கடலளவில் சூழ் அழுத்தம் எங்கும் நிலையான ஒன்றாக இராது என்றாலும், ஏறத்தாழ 100 கி.பாஸ்கல் என்று எடுத்துக் கொள்ளலாம். பார் என்னும் அளவை கொண்டும் சூழ் அழுத்தம் குறிக்கப்படுவதுண்டு. ஒரு பார் என்பது 100 கி.பாஸ்கல் அளவுக்குச் சமமானது. ஒரு சதுர அங்குலப் பரப்பில் 14.7 பவுண்டு விசை என்னும் அலகிலும் பொதுவாக சூழ் அழுத்தம் வழங்கப்படும்.

கடலடியில் ஆழமாகச் செல்லச் செல்ல, சூழ் அழுத்தமானது அதிகமாகும். நீர் காற்றை விட அடர்த்தியானது என்பதால் கடலடியில் அழுத்தம் கடலுக்கு மேலே இருப்பதை விட அதிகமாகும். காற்று மண்டலத்தில், உயரே செல்லச் செல்ல, சூழ் அழுத்தம் குறையும். நிலவும் சூழ் அழுத்தத்தைக் கொண்டு தரையில் இருந்து எவ்வளவு உயரம் என்பதைக் கணக்கிடவும் முடியும்.

மேற்கோள்கள்

தொகு
  1. McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms Copyright © 2003 by McGraw-Hill Companies, Inc. "Sci-Tech Dictionary ambient pressure on Answers.com". McGraw-Hill Companies, Inc.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழ்_அழுத்தம்&oldid=2130235" இலிருந்து மீள்விக்கப்பட்டது