செக்வே என்பது ஒரு தனிநபர் போக்குவரத்து வண்டி. இது உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவானது. இரு சில்லுகளைக் கொண்ட இந்த ஊர்தி ஒருவரை சமநிலையைப் பேணி நகர்த்தி செல்ல வல்லது. ஒருவர் அந்த வண்டியில் ஏறி முன்னே சற்று சாய்ந்தால் முன்னேயும், பின்னே சாய்ந்தால் பின்னேயும், "Lean Steer" கொண்டு திரும்பவும் முடியும். செக்வே, Gyroscopic உணரிகள், ஐந்துக்கும் மேற்பட்ட microprocessor கொண்டு சமநிலையைப் பேணுகிறது. வண்டிக்காண ஆற்றலை மின்னோடிகள் வழங்குகின்றன.

Segway Polizei 2.jpg

இந்த வண்டி மணிக்கு 20 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதன் விலை 5,000 அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்டது. இதை அமெரிக்க கண்டுபிடிப்பாளர் Dean L. Kamen அவர்களின் நிறுவனம் உருவாக்கியது.

இந்த வண்டியை தசாவதாரம் படத்தில் கமல் பயன்படுத்திக் காட்சிப்படுத்தினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்வே&oldid=2741882" இருந்து மீள்விக்கப்பட்டது