செக் புள்ளி முயல்
செக் புள்ளி முயல் (Czech Spotted Rabbit) (செக் கட்டங்களுடைய முயல்) 6-8 பவுண்டுகள் எடையுள்ள நடுத்தர அளவிலான முயல். இது செக் குடியரசில் தோன்றியது. இது குறுகிய, நிமிர்ந்த காதுகளைக் கொண்டுள்ளது. முயல் அகூட்டி, கருப்பு, நீலம், பழுப்பு, ஆமை ஓட்டின் நிறம் மற்றும் மூவகை வண்ணங்களில் காணப்படுகிறது. இதனுடைய தோலில் புள்ளிகளைக் கொண்டுள்ளது.[1]
இந்த முயல் இனத்தினை அமெரிக்க முயல் வளர்ப்போர் சங்கமும் பிரித்தானிய முயல் குழுமமும் அங்கீகரிக்கவில்லை .[2][3][4]
1906இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த முயல் ஒரு கலப்பின வகையினைச் சாந்ந்தது.[5] இதனுடைய "செக் புள்ளி" என்ற பெயர் செக் குடியரசிலிருந்து வந்த முயல் என்பதாலும், புறத்தோலில் புள்ளிகளைக் கொண்டதாலும் தோன்றியது. இது 1930இல் ஜெர்மனி, போலந்து மற்றும் சுவீடனுக்குக் கொண்டு வரப்பட்டது.[6] இது செக் வளர்ப்போர் சங்கத்தால் 2000 ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[7]
மேலும் காண்க
தொகு- முயல் இனங்களின் பட்டியல்
- சரிபார்க்கப்பட்ட இராட்சத
மேற்கோள்கள்
தொகு- ↑ "Czech Spot". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.
- ↑ "Czech Spotted Rabbit". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.
- ↑ "The Czech Spotted Rabbit". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.
- ↑ "Raising The Czech Spotted Rabbit". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.
- ↑ "Czech Spot". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.
- ↑ "Czech checked rabbit (Czech spot)". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.
- ↑ "Analysis of Czech rabbit genetic resources". பார்க்கப்பட்ட நாள் December 18, 2020.