செங்கண்மா என்பது ஓர் ஊர். இங்கிருந்த வள்ளல் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன். இவன் மலைபடுகடாம் என்னும் நூலில் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன் என்பவரால் பாராட்டப் பட்டவன்.

செங்கண்மா இருப்பிடம்

தொகு

செங்கண்மா என்னும் ஊரின் இருப்பிடம் பற்றி இருவேறு கருத்துகள் நிலவிவருகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள செங்கம்

தொகு

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நகரம் செங்கம். இதுதான் சங்ககாலத்து நன்னன் (மலைபடுகடாம் நூலின் பாட்டுடைத் தலைவன்) இருந்த ஊர் என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.1

கேரள மாநிலத்தில உள்ள சிய்யாறம் Chiyyaram

தொகு

கேரள மாநிலத்திலுள்ள சிய்யாறம் என்னும் ஊரே சேயாறு என்னும் பெரியாறு பாயும் செங்கண்மா என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.2

ஆரிப் படுகர்

தொகு

மலைபடு கடாம் ஆரிப் படுகர் அளிக்கும் விருந்தைக் குறிப்பிடுகிறது. ஆற்றுப் படுகைகளில் வாழ்பவர் படுகர் எனப்பட்டனர். இவர்கள் நீலகிரி மலையில் வாழ்ந்த சங்ககாலப் படுகர் எனக் கருதுகின்றனர்.2 இதன் அடிப்படையிலும், மலைபடுகடாம் நூலில் கூறப்படும் மலையேறும் வழி பற்றிய குறிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு சிய்யாறம் என்னும் ஊரே செங்கண்மா என்பர்.

மேற்கோள்

தொகு

1 பத்துப்பாட்டு ஆராய்ச்சி, டாக்டர். மா. இராசமாணிக்கனார், சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு.
2 பத்துப்பாட்டு செய்தி உரை, பொதுவன் ஆடிகள், (2009)

"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கண்மா&oldid=890291" இலிருந்து மீள்விக்கப்பட்டது