செங்கரும்பு
செங்கரும்பு (Saccharum officinarum) என்பது கரும்பில் ஒரு வகை ஆகும். செங்கரும்பு என்பதற்கு சிவந்த நிறக் கரும்பு என்று பொருள்[1] இருந்தாலும், இது கருமை கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்தக் கரும்பைக் கொண்டு தமிழ்நாட்டில் வெல்லம் சர்க்கரை போன்றவை தயாரிக்கப்படுவதில்லை. சாப்பிட மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
செங்கரும்பு | |
---|---|
மொசாம்பிக்கில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்பு | |
கையால் அறுவடை செய்யப்படும் செங்கரும்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Saccharum |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/SaccharumS. officinarum
|
இருசொற் பெயரீடு | |
Saccharum officinarum L. |
செங்கரும்பானது பொங்கல் விழாவில் படைக்கும் முக்கிய பொருளாக உள்ளது.[2] இது பத்து மாத பயிர் ஆகும். இந்தக் கரும்பை பொங்கலுக்கு அறுவடை செய்யும் விதத்திலேயே நடவு செய்யப்படுகிறது. பெரும்பாலும் இது தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டுமே பயிரிடப்படுகிறது. அங்கிருந்து பொங்கலுக்காக தமிழகம் எங்கும் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தமிழர்கள் வாழும் கர்நாடகம், ஆந்திரம், மகாராட்டிரம், தில்லி போன்ற மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.[3]