செங்கிஸ் கான் (தொலைக்காட்சி நிகழ்ச்சி)

ஒரு பி. பி. சி. வரலாற்று நிகழ்ச்சி

செங்கிஸ் கான் என்பது 2005ஆம் ஆண்டு வெளி வந்த பிபிசி ஆவணப்படமாகும். இந்நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனல் ஐக்கிய இராச்சியம் துணைத் தயாரிப்புச் செய்தது. இது 13ஆம் நூற்றாண்டின் மங்கோலியப் போர்ப் பிரபுவான செங்கிஸ் கானின் வாழ்க்கையைப் பற்றி விளக்கிக் கூறியது. இந்நிகழ்ச்சியில் செங்கிஸ் கானாக ஒர்க்கில் மக்கான் நடித்தார். கென்னத் கிரான்கம் பிண்ணனிக் குரல் கொடுத்தார். எட்வர்ட்டு பசல்கட் இந்நிகழ்ச்சியை இயக்கினார். நிகழ்ச்சியை அலிஸ்டர் சிம்சன் விளக்கிக் கூறினார்.[1] இந்நிகழ்ச்சி முழுவதுமாக மங்கோலியாவிலேயே படமாக்கப்பட்டது. இதில் நடித்தவர்கள் அனைவரும் மங்கோலியர்கள் ஆவர்.[2] த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படத் தொடரில் பயன்படுத்தப்பட்ட அதே கணினியுருப்படத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி யுத்த காட்சிகள் மீண்டும் உருவாக்கப்பட்டன.[3]

செங்கிஸ் கான்
வகைஆவணத் திரைப்படம்
எழுத்துஇசபெல்லா கிரே
இயக்கம்எட்வர்டு பசல்கட்
நடிப்புஒர்க்கில் மக்கான்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
தொடர்கள்1
அத்தியாயங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஜோனதன் ஸ்டாம்ப் மற்றும் எட்வர்டு பசல்கட்
ஓட்டம்50 நிமிடங்கள்
விநியோகம்பிபிசி
ஒளிபரப்பு
அலைவரிசைபிபிசி
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 25, 2005 (2005-04-25) –
1 ஏப்ரல் 2015 (2015-04-01)

மங்கோலியத் தலைவர் பற்றிய தேவையற்ற எதிர்மறையான பெயரை நன்முறையில் விளக்கிக் கூறுவதற்காக இந்த ஆவணப்படம் முயற்சித்தது. அனைவருக்கும் அழிவை ஏற்படுத்திய பழங்குடியினப் போர்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த, உதவி மனப்பான்மையும், அன்புள்ளமும் கொண்ட ஒரு தலைவனாக இத்திரைப்படம் செங்கிஸ் கானைப் பற்றிக் கூறியது.[3] மங்கோலியப் படையெடுப்புகளின் மிருகத்தனத்தை இத்திரைப்படமானது காட்டிய போதும், த டைம்ஸ் பத்திரிகையின் ஜோ யோசோப்பு இத்திரைப்படத்தில் சில நேரங்களில் கொடுமைத் தன்மையானது மிகக் குறைவாகவே காட்டப்பட்டுள்ளதாக எழுதினார்.[2]

2015ஆம் ஆண்டு இத்திரைப்படத்தை தங்கள் தங்கும் விடுதியில் பார்த்ததற்காகப் பிரித்தானியர், தென் ஆப்பிரிக்கர் மற்றும் இந்தியர் உள்ளிட்ட 20 அயல் நாட்டவர்களைச் சீனா தன் உள் மங்கோலியா தன்னாட்சிப் பகுதியிலிருந்து வெளியேற்றியது. பயங்கரவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்தை இத்திரைப்படம் ஊக்குவிப்பதாகச் சீன அரசுக் குழுக்கள் கூறின. பிரிவினைவாதக் குழுக்கள் அல்லது மங்கோலிய இனத்தவருக்கு கூடுதல் உரிமைகள் கேட்கும் இயக்கங்களுக்குச் சீனா எதிர்ப்புத் தெரிவிக்கிறது.[4][5]

ஒர்க்கில் மக்கான் தொகு

இந்தத் திரைப்படத்தில் செங்கிஸ் கானாக நடித்த ஒர்க்கில் மக்கான் 2009ஆம் ஆண்டு மங்கோலிய மற்றும் உருசியக் கூட்டுத் தயாரிப்புத் திரைப்படமான பை த வில் ஆப் சிங்கிஸ் கானில் சமுக்காவாக நடித்தார். த மாடல் என்ற மங்கோலியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒரு நடுவராகக் கலந்து கொண்டார். நெட்பிளிக்ஸ் தொடரான மார்க்கோபோலோவில் மங்கோலிய அமைப்பாளராக இவர் பணியாற்றினார். 2015ஆம் ஆண்டு மங்கோலியத் தேசியத் திரைப்படக் குழுவினை இவர் நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார்.[6]

உசாத்துணை தொகு

  1. Genghis Khan, BBC One, retrieved 1 November 2021.
  2. 2.0 2.1 Joe Joseph, "The greatest story never told", The Times, T2 p. 23, 26 April 2005.
  3. 3.0 3.1 Anthony Barnes, Jonathan Thompson. "BBC gives Genghis Khan a makeover", Independent, 2 January 2005, retrieved 1 November 2021.
  4. AP, "China deports 20 for watching Genghis Khan flick", The Times of Israel, 20 July 2015, accessed and archived 14 January 2022.
  5. Reuters, "China to deport foreigners after Genghis Khan documentary ‘misunderstanding’", Hong Kong Free Press, 19 July 2015, accessed and archived 14 January 2022.
  6. Murray Ashton, "On location in Mongolia with Orgil Makhaan, the founder and president of the Mongolian National Film Commission", The Location Guide, 26 July 2021, accessed and archived 3 November 2021.

வெளி இணைப்புகள் தொகு