உள் மங்கோலியா

சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம்

உள் மங்கோலியா (Inner Mongolia) 1947ஆம் ஆண்டு முதல் வடக்கு சீனாவில் அமைந்த தன்னாட்சி பெற்ற மாகாணமாகும். இதன் தலைநகரம் ஹோஹாட் நகரமாகும். உள் மங்கோலியா, வடக்கில் மங்கோலியாவை எல்லையாக கொண்டது. சீனாவின் பரப்பில் 12% விழுக்காட்டை உள் மங்கோலியா கொண்டுள்ளது. உள் மங்கோலியா, செங்கிஸ் கான் ஆட்சியில் இருந்த பகுதியாகும்.

உள் மங்கோலியா
内蒙古自治区
சீனாவின் தன்னாட்சிப் பகுதி
Map showing the location of Inner Mongolia
உள் மங்கோலியாவின் அமைவிடம்
பெயர்ச்சூட்டுமலைத்தொடர்கள், மேய்ச்சல் நிலங்கள், பாலைவனங்கள்
தலைநகரம்உலன்ஹாட் (1947–1949)
சாங்ஜியாகௌ (1950–1952)
ஹோஹாட் (1953 முதல்)
பெரு நகரம்ஹோஹாட்
மாவட்டங்கள்12, 101 நகரங்கள், 1425 சிறுநகரங்கள்
அரசு
 • சீனப் பொதுவுடமைக் கட்சியின் செயலர்வாங் சூன்
 • ஆளுனர்பகதூர்
பரப்பளவு
 • மொத்தம்11,83,000 km2 (4,57,000 sq mi)
 • பரப்பளவு தரவரிசை3வது இடம்
மக்கள்தொகை
 (2010)[2]
 • மொத்தம்2,47,06,321
 • தரவரிசை23வது இடம்
 • அடர்த்தி20.2/km2 (52/sq mi)
  அடர்த்தி தரவரிசை28வது இடம்
மக்கள் வகைப்பாடு
 • இனக் குழுக்கள்ஹன் சீனர்கள்- 79%
மங்கோலியர்கள் - 17%
மஞ்சு மக்கள் - 2%
ஹூய் மக்கள் - 0.9%
தவுர் மக்கள் - 0.3%
 • மொழிகள்மங்கோலிய மொழி]] [3] மாந்தரின் சீன மொழி
ஐஎசுஓ 3166 குறியீடுCN-15
மொத்த உள்நாட்டு உற்பத்தி (2013)273.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
தனி நபர் வருமானம்10,992 அமெரிக்க டாலர்
மனித மேம்பாட்டுச் சுட்டெண்0.722
இணையதளம்http://www.nmg.gov.cn

உள் மங்கோலியா, சீனாவின் மூன்றாம் பெரிய மாகாணாமாகும். 2010ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கட்தொகை 24,706,321 ஆகும். மக்கள் தொகை அடிப்படையில், சீனாவில் 23வது இடத்தில் உள்ளது.[5] உள் மங்கோலியாவின் அலுவல் மொழிகள், சீனம் மற்றும் மங்கோலிய மொழி ஆகும். மக்கள் பின்பற்றும் முக்கிய சமயம், திபெத்திய பௌத்தம் ஆகும்.

வரலாறு

தொகு

பண்டைய வரலாறு

தொகு

மத்திய மற்றும் மேற்கு உள் மங்கோலியா கால்நடைகள் மேய்க்கும் நாடோடி மக்கள் வாழ்ந்த பகுதியாக சீனாவின் அரசுகளால் ஆளப்பட்டு வந்தது.

மிங் ஆட்சியாளர்கள் காலத்தில் உள் மங்கோலியா

தொகு
 
பெய்ஜிங் நகரத்தில் செங்கிஷ்கான் நுழைதல்
 
உச்சத்தில் இருந்த வடக்கு யுவான் அரசு

1206இல் செங்கிஸ்கான் மங்கோலியாவின் அனைத்து பகுதிகளையும் ஒன்றினைத்து மங்கோலியப் பேரரசை உருவாக்கினார். 1271இல் செங்கிஸ்கானின் பேரன் குப்ளாய்கான் காலத்தில் தற்கால சீனாவின் உள் மங்கோலியாவில் மங்கோலியர்களை பெருமளவில் குடியமர்த்தினார். 1368இல் மிங் வம்சத்தினர் உள் மங்கோலியாவை கைப்பற்றி, மங்கோலியர்களின் அடுத்த தொடர் தாக்குதலுக்கு பயந்து, உள் மங்கோலியாவிற்கும், வெளி மங்கோலியாவிற்கிடையே சீனப் பெருஞ்சுவர் எழுப்பினார். 1449இல் வெளி மங்கோலியாவிலிருந்து வெள்ளமென திரண்டு உள் மங்கோலியாவில் கி பி 1635 வரை குடியேறினர். சீனாவின் வடக்கு யுவான் வம்ச ஆட்சியின் போது, உள் மங்கோலியா பகுதியானது, மங்கோலியர்களின் அரசியல், கலாசார மையமாகவும் மாறியது.[6]

கியுங் காலத்தில் உள் மங்கோலியா

தொகு

மஞ்சூரியாவிலும், அதன் அருகில் இருந்த மங்கோலிய பழங்குடிகள், உள் மங்கோலியர்களுடன் திருமண உறவு கொண்டு, அணி சேர்ந்து நூர்ஹசி தலைமையில் 1593இல் ஜிங் வம்சத்தை துவக்கி கிழக்கு மற்றும் வட கிழக்கு சீனாவை ஆண்டனர்.[7] 1635இல் மஞ்சூரியர்கள் உள் மங்கோலியாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் மிங் சீனாவை 1644இல் கைப்பற்றி கியுங் வம்ச ஆட்சியை ஏற்படுத்தினர். கியுங் வம்ச ஆட்சியில்1636-1911 முடிய, மங்கோலியா மற்றும் உள் மங்கோலியா பகுதிகள் கியுங் அரச வம்ச ஆட்சியில் இருந்தது.

சீனக் குடியரசில் உள் மங்கோலியா

தொகு

வெளி மங்கோலியா மட்டும் கியுங் அரச வம்ச ஆட்சியின் போது 1911இல் விடுதலை பெற்று தனி நாடானது. 1912இல் சீனக் குடியரசு அமைக்கப்பட்டப் பிறகு உள் மங்கோலியா சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக விளங்கியது.

சீனக் குடியரசு உள் மங்கோலியாவை நிர்வாக வசதிக்க்காக ரெஹி, சாஹார், சுய்யுவான், ஹலுன்ப்யுர், தாவோசி மங்கோலியா என பெரும் பகுதிகளாக பிரித்தனர்.

மெங்ஜியாங் காலத்தில்

தொகு

1931 மஞ்சூரியா, ஜப்பானின் கைப்பாவை அரசாக மாறிய போது, மஞ்சுகோ ஆட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள் மங்கோலியா 1933இல் இணைக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் முடியும் வரை உள் மங்கோலியா மஞ்சூரியாவின் பகுதியாக இருந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஆகஸ்டு 1945-இல் 15% மங்கோலியர்களைக் கொண்ட உள் மங்கோலியா, சீனக் குடியரசின் ஒரு மாகாணமாக அமைந்தது. மங்கோலியோ குழந்தைகள் பள்ளிக்கல்வியை மங்கோலிய மொழியில் அல்லாது சீனாவின் மாண்டரின் மொழியில் பயிற்றுவிக்கப்படுவதை எதிர்த்து, உள் மங்கோலிய மக்கள் தகங்ல் எதிர்ப்பை சீன கம்யூனிச அரசுக்கு தெரிவிக்கின்றனர்.[8]

நிர்வாகப் பிரிவுகள்

தொகு
 1. லிங்கே மாவட்டம்
 2. ஹாய்பொவான் மாவட்டம்
 3. டாங்செங் மாவட்டம்
 4. பௌடோவ்
 5. ஹோன்லேல் மாவட்டம்
 6. சிங்செங் மாவட்டம்
 7. ஜின்னிங் மாவட்டம்
 8. சாங்ஷான் மாவட்டம்
 9. ஹோர்கின் மாவட்டம்
 10. ஹுலுன்புர் மாவட்டம்
 11. அல்க்ஷா லீக்
 12. க்ஷிலிங்கோல் லீக்
 13. ஹிங்கான் லீக்

பொருளாதரம்

தொகு

கால்நடைகள் மேய்த்தல், வேட்டையாடுதல், கோதுமை மற்றும் திராட்சை பயிரிடுதல்

சமயங்கள்

தொகு
 1. திபெத்திய பௌத்தம்
 2. தாவோயிசம்
 3. ரோமன் கத்தோலிக்கம்
 4. இசுலாம்

மக்கள் பரம்பல்

தொகு
 
ஹோஹாட் நகர இசுலாமிய வீதி

ஹான் சீனர்களின் மக்கட்தொகை 83.6%, அடுத்து மங்கோலியர்களின் மக்கட்தொகை 17.11ஆக உள்ளது. மற்ற இனக் குழுக்கள், தௌர் மக்கள், இவாங்க் மக்கள், ஒரேகன் மக்கள், ஹூயு மக்கள் மற்றும் மஞ்சு மக்கள், கொரிய மக்கள் ஆவர்.

2010ஆம் மக்கள்தொகையின்படி இனக்குழுக்கள்[9]
இனக் குழுக்கள் மக்கட்தொகை விழுக்காடு
ஹான் சீனர்கள் 19,650,687 79.54%
மங்கோலியர்கள் 4,226,093 17.11%
மஞ்சூரியர்கள் 452,765 1.83%
ஹூயு மக்கள் 221,483 0.90%
தௌர் மக்கள் 76,255 0.31%
ஹூயு மக்கள் 26,139 0.11%
கொரியர்கள் 18,464 0.07%
ரஷ்யர்கள் 4,673 0.02%
ஆண்டு மக்கட்தொகை ஹான் சீனர்கள் மங்கோலியர்கள் மஞ்சூரியர்கள்
1953[10] 6,100,104 5,119,928 83.9% 888,235 14.6% 18,354 0.3%
1964[10] 12,348,638 10,743,456 87.0% 1,384,535 11.2% 50,960 0.4%
1982[10] 19,274,281 16,277,616 84.4% 2,489,378 12.9% 237,149 1.2%
1990[11] 21,456,500 17,290,000 80.6% 3,379,700 15.8%
2000[12] 23,323,347 18,465,586 79.2% 3,995,349 17.1% 499,911 2.3%
2010[13] 24,706,321 19,650,687 79.5% 4,226,093 17.1%

படக்காட்சிகள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
 1. The Cyrillic spelling, as used in Mongolia, would be Өвөр Монголын Өөртөө Засах Орон (Övör Mongolyn Öörtöö Zasakh Oron).
  In Unicode: ᠦᠪᠦᠷ
  ᠮᠣᠩᠭᠤᠯ ᠤᠨ
  ᠥᠪᠡᠷᠲᠡᠭᠡᠨ
  ᠵᠠᠰᠠᠬᠣ
  ᠣᠷᠣᠨ

மேற்கோள்கள்

தொகு
 1. "Doing Business in China - Survey". Ministry Of Commerce - People's Republic Of China. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census". National Bureau of Statistics of China. Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2015-11-02.
 3. "China". Ethnologue.
 4. "xinhua". xinhuanet.com.
 5. "TABULATION ON THE 2010 POPULATION CENSUS OF THE PEOPLE'S REPUBLIC OF CHINA". stats.gov.cn.
 6. CPAtwood-Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.246
 7. Atwood, Christopher. Encyclopedia of Mongolia and the Mongol Empire, p.449
 8. சீனாவில் ஒரு மொழிப்போராட்டம்: "தாய்மொழிக்காக உயிர்கொடுப்போம்" - கிளர்ந்தெழும் மங்கோலியர்கள்
 9. Department of Population, Social, Science and Technology Statistics of the National Bureau of Statistics of China (国家统计局人口和社会科技统计司) and Department of Economic Development of the State Ethnic Affairs Commission of China (国家民族事务委员会经济发展司), eds. Tabulation on Nationalities of 2010 Population Census of China (《2010年人口普查中国民族人口资料》). 2 vols. Beijing: Nationalities Publishing House (民族出版社), 2003. (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 7-105-05425-5)
 10. 10.0 10.1 10.2 (without Rehe Province)《中华人民共和国人口统计资料汇编1949—1985》,"People's Republic of demographic data compilation 1949-1985" 中国财政经济出版社,1988。第924页。 "China Financial and Economic Publishing House, 1988. Section 924."
 11. 内蒙古自治区统计局(Inner Mongolia Autonomous Region Bureau of Statistics) 1990年第四次人口普查(4th National Census) பரணிடப்பட்டது 2013-07-27 at the வந்தவழி இயந்திரம்
 12. 《2000年人口普查中国民族人口资料》, (5th National Census)民族出版社,2003。第4—8页。
 13. (6th National Census) 内蒙古自治区发布2010年第六次全国人口普查主要数据公报 பரணிடப்பட்டது 2013-07-12 at the வந்தவழி இயந்திரம்

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Inner Mongolia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்_மங்கோலியா&oldid=3928098" இலிருந்து மீள்விக்கப்பட்டது