தனி நபர் வருமானம்

தனி நபர் வருமானம் என்பது தலா வருமானம் அல்லது நபர்வரி வருமானம் (GDP per head, Per capita income) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு பொருளாதாரக் கருவியாகும். உண்மையான தனி நபர் வருமானம் உயர்ந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் கருதப்படும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பதாகும். அதாவது;

நாடுகளின் தனி நபர் வருமானம் 2018

தனி நபர் வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி/மொத்த மக்கள் தொகை

இது பொதுவாக ஒரு நாட்டினையும் மற்றொரு நாட்டினையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் மதிப்பை சர்வதேச நாணய மதிப்பில் அமெரிக்க டாலர் அல்லது யூரோ எனும் மதிப்பீட்டில் கணிக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "American Community Survey and Puerto Rico Community Survey: 2021 Subject Definitions". U.S. Census Bureau. p. 90. பார்க்கப்பட்ட நாள் 2024-01-28.
  2. "The world's richest countries in 2023". The Economist. https://www.economist.com/graphic-detail/2023/12/15/the-worlds-richest-countries-in-2023. 
  3. Förster, Michael; d'Ercole, Marco (2012). Besharov, Douglas J.; Couch, Kenneth A. (eds.). Counting the poor: new thinking about European poverty measures and lessons for the United States. International policy exchange series. Oxford: Oxford Univ. Press. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-986058-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனி_நபர்_வருமானம்&oldid=4099423" இலிருந்து மீள்விக்கப்பட்டது