செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்

செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வல்லம் எனும் சிற்றூரில் அமைந்த மூன்று குடைவரைக்கோயில்களைக் குறிக்கும். இவற்றில் ஒன்று பெருமாளுக்கானது.[1]

முதல் குடவரை வேதாந்தீசுவரர் எனும் சிவபெருமானுக்கு அமைந்தது. முதல் குடவரைக்கு அடுத்து அமைந்துள்ள இடைப்பட்ட குடைவரை சிவலிங்கத்திருமேனி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பின்னப்பட்டுவிட்டதால் வழிபாடு நிறுத்தப்பட்டது. சரிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு அடுத்து வடக்கில் தாழ்வான பாறைச்சரிவில் அமைந்துள்ளது கரிவரதராஜப் பெருமாளுக்கான திருக்கோயில்.[1]

இக்குடைவரைகள் அமைவதற்கு கொம்பை எனும் பல்லவ ராஜகுமாரியும் சாதாரண குடிமகளும் காரணமாக அமைந்துள்ளனர். [1]

வல்லம் வேதாந்தீசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:வல்லம் வேதாந்தீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வல்லம் (செங்கல்பட்டு)
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வேதாந்தீஸ்வரர்
தாயார்:ஞானாம்பிகை
தீர்த்தம்:சிவகங்கா புஷ்கரணி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:குடைவரைக் கோயில்
கல்வெட்டுகள்:உண்டு
வரலாறு
தொன்மை:1300 ஆண்டுகள்
அமைத்தவர்:பல்லவ மன்னர் மகேந்திர வர்மன்
தொலைபேசி எண்:9443172894[1]

வல்லம் வேதாந்தீசுவரர் திருக்கோயில் பல்லவர் காலத்தில் அமைந்த குடைவரைக்கோயில். வல்லம், குன்றின் மேலிருக்கும் குடைவரையில் அமைந்துள்ளது.[1]

வல்லம் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
பெயர்
பெயர்:வல்லம் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:வல்லம் (செங்கல்பட்டு)
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:குடைவரைக் கோயில்
வரலாறு
தொன்மை:1300 ஆண்டுகள்
அமைத்தவர்:பல்லவ மன்னர் மகேந்திர வர்மன்
தொலைபேசி எண்:9443172894[1]

ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில். செங்கற்பட்டு மாவட்டம் , வல்லம் ஊரில் அமைந்துள்ள முதலிரு குடைவரைகளுக்கு அடுத்து தாழ்வான பாறைச்சரிவில் அமைக்கப்பட்ட மூன்றாவது குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. பெருமாள் திருக்கோயிலில் விஷ்ணுதுர்க்கை அமைந்துள்ள அரிய அமைப்பு கொண்டது.[1]

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 குமுதம் ஜோதிடம்; 13.07.2012; பக்கம் 5-6;

வெளியிணைப்புகள் தொகு