செஞ்சி கோதண்டராமர் கோவில்
செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் செஞ்சியில் அமைந்துள்ள பழைமையான கோதண்டராமர் திருக்கோயில். இங்கு புனர்நிர்மாணப்பணிகள் நடைபெறுகின்றன. கி.பி.1714ல் தேசிங்கு ராஜா ஆட்சி சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்த போது சிதைக்கப்பட்ட திருக்கோயில்.[2]
செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் [1] | |
---|---|
பெயர் | |
பெயர்: | செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் [1] |
அமைவிடம் | |
ஊர்: | செஞ்சி |
மாவட்டம்: | விழுப்புரம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கோதண்டராமர் |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | பழங்காலக் கிணறு |
தொலைபேசி எண்: | 9865474252[1] |
பழைமையான கிணறு
தொகுஇத்திருக்கோயிலில் கருவறையின் பின்புறம் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கிணறு இருந்திருப்பது 2012 ஆம் ஆண்டு தெரிய வந்துள்ளது.[3]
தீர்த்தவாரி படித்துறை
தொகுசீரமைப்புப் பணிகளின் போது 200 ஆண்டுகளுக்கும் மேல் மண்ணில் மறைந்திருந்த தீர்த்தவாரி படித்துறை வெளிப்பட்டது.[4]
சிலைகள்
தொகுஇத்திருக்கோயிலின் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணவேணி தாயார், ஸ்ரீ கோதண்டராமர் விக்கிரகங்கள் முன்பு செஞ்சியை ஆண்ட நவாப் படைகளால் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.[3]
சர்ச்சை
தொகுகோதண்டராமர் கோயில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்று சில கிறித்துவ அமைப்புகள் கூறியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டு கோயில் வழிபாடு தடுக்கப்பட்டு, பின்னர், இந்து முன்னணி அமைப்பினராலும் மக்களாலும் பிரச்சனை முன்னெடுக்கப்பட்டு கோயில் சாவி வட்டாட்சியரால் இந்து முன்னணியிடம் வழங்கப்பட்டது.[5][2]கோயிலை யாருக்கும் விற்க முடியாது எனும் சட்டப்பிரிவு எடுத்துக்காட்டப்படுகின்றது.[6]
அமைவிடம்
தொகுசங்கராபரணி ஆற்றங்கரையில் திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் செஞ்சி அமைந்துள்ளது.[1]
புனர்நிர்மாணப்பணிகள்
தொகுஅறக்கட்டளை மூலம் நடைபெற்று வரும் இத்திருக்கோயில் புனர்நிர்மாணப் பணிகளுக்கு குமுதம் ஜோதிடம் வார இதழும் 2012ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 குமுதம் ஜோதிடம்; 17.08.2012; பக்கம் 2-6
- ↑ 2.0 2.1 http://www.tamilolli.com/?p=11204[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 http://www.dinamani.com/tamilnadu/article1245012.ece
- ↑ http://www.thinakaran.lk/2011/02/17/?fn=i1102177[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.dinamani.com/tamilnadu/article1010360.ece
- ↑ http://tamil.oneindia.in/news/2010/02/04/hindu-temple-lands-not-be-leased.html