செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில்

செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சியிலுள்ள மிகப்பெரிய கோவிலாகும். செஞ்சி கோட்டையில் அமந்துள்ள இது, முத்தையாலு நாயக்கர் காலத்தில் கட்டப்பெற்றதாகும் (1540 - 1550 CE). இது வெங்கடேசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[1]

செஞ்சி வெங்கடரமணா கோவில் ஆயிரங்கால் மண்டபம்

வரலாறு

தொகு

கட்டிடப் பகுதிகள்

தொகு

செஞ்சிக் கோட்டையில் கோயில்களும். குளங்களும். மேடைப் பகுதிகளும் மற்றும் கல்யாண மகால். நாட்டிய சாலை, தர்பார் மண்டபம், மசூதி ஆகிய கட்டடப் பகுதிகளும் அமைந்துள்ளன.

வைணவக் கோயில்கள்

தொகு

கோட்டைப் பகுதியில் அரங்கநாதார் கோயில், வேணுகோபாலசாமி கோவில், வெங்கடரமணசாமி கோவில், பட்டாபி இராமசாமி கோவில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் பிரதானமானது வெங்கடரமணசாமி கோவில்ஆகும்

வெங்கடரமணசாமி கோவில்

தொகு

கீழ்க்கோட்டையில் சிதைந்த நிலையில் இக்கோவில் காணப்படுகிறது. இக்கோவில் முத்தையாலு நாயக்கன் காலத்தில் கட்டப்பெற்றதாகும். பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் போது, டூப்ளக்ஸ் Governor Dupleix.[2][1] சிலையின் பீடத்தை அமைப்பதற்காக இக்கோயிலிலிருந்து உயர்ந்த ஒற்றைத் தூண்களை பாண்டிச்சேரிக்கு எடுத்துச் சென்றுள்ளனர் என்பது தெரிகிறது. இக்கோயிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கருங்கற்களைக் கொண்டு மேல் சித்தாமூரிலுள்ள தேர்முட்டு கட்டப்பெற்றுள்ளது. கி.பி.1860ல் சென்னை மாகாணப் பணியில் பணிபுரிந்த ஸ்ரீ பாலய்யா என்ற சமண சமயத்தைச் சார்ந்த அலுவலர் செஞ்சியிலிருந்து கருங்கல் துண்டுகளை மேல்சித்தா மூருக்கு எடுத்துச் சென்றுள்ளார். இவற்றுள் கருங்கல் யானை முக்கியமானதாகும். இது தற்பொழுது மேல்சித்தாமூரிலுள்ள தேர்முட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. [3] வெங்கடரமணசாமி கோவில் இராமாயணக் காட்சிகளை சித்தரிக்கின்ற சிற்பங்களும், விஷ்ணுவின் அவதாரங்களும், புராணக் காட்சிகளும் புடைச் சிற்ப வரிசையில் நுழைவாயிலின் இரண்டு பக்கங்களிலும் வடிக்கப்பட்டுள்ளன. தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையும் காட்சியும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

கட்டிடக்கலை

தொகு

இந்த கோவில் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பெரியகோவிலின் கட்டிட அமைப்பாகும்.இராமாயண காட்சிகள்,விஷ்ணு அவதாரம் மற்றும் சதுர மந்தனின் புராணங்களை சித்தரிக்கும் வண்ணம் நுழைவாயிலின் இரு பக்கமும் பிரமாண்டமான் சிற்பங்கள் காணப்படுகிறது,மேற்கு புறம் ஆணைகுளம் கணப்படுகிறது இது யானை குளிப்பாட்ட பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.மேலும் சர்க்கரைகுளம்,செட்டிகுளம் அமந்துள்ளது இவை செஞ்சியின் நீர்த் தேவைகளுக்காக அணைக்ட்டுகளுடன் கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பெற்றதாகும்.கோவிலுக்கு கிழக்கே கல்யாணமகால் என்ற் ஒரு கட்டிட புதையல் உள்ளது, மெக்கன்சி கையெழுத்து பிரதிகளின்படி கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும் அவர் துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் ஆவார்.விஜய நகரபாணியில் கட்டப்பட்ட கவர்ச்சிகரமான நினைவுச்சின்னம்,சதுர வடிவகோபுரங்களுடன் கூடிய 8 சதுர மீட்டர் அறை உள்ளது.இதில் உள்ள அறைகள் பெண்களுக்கும் அரசர்களுக்கும்,ஆளுநர்களுக்கும் ஒதுக்கப்பட்ட்ருந்தது ,இதற்கு குடிநீர் சர்க்கரைகுளத்திலிருந்து சுடுமண் குழாய் மூலம் எடுத்து வரப்பட்டது.

செட்டிக்குளம்

தொகு

17ம் நூற்றாண்டு ராம் செட்டி அல்லது மராட்டிய ஆட்சியின் கீழ் 18ம் நூற்றாண்டு ராம ஷெட்டி அவர்களால் கட்டபட்டிருக்க வேண்டும்.

சர்க்கரைக்குளம்

தொகு

சர்க்கரைக்குளம் நிர்மல நாயக்கனால் நிர்மாணிக்கப்பட்டது,வராக நதிக்கு செல்லும் பாதையில் வெங்கடரமணசாமி கோவில்அருகில் வராக நதிக்கரையில் சர்க்கரை பெருமள் கோவில் ஒன்றையும் கட்டினார். தேசிங்கு இராஜாவின் உடல் சர்க்கரை குளத்தின் அருகே தகனம் செய்யப்பட்டது இதன் அருகில் இயற்கையாகவே ஒரு பெரிய கருங்கல் பாறை உள்ளது.

கோட்டையில் உள்ள மற்ற கோவில்கள் & கட்டிடக்கலை

தொகு

அரங்கநாதர் கோவில்

தொகு

இராஜகிரியின் உச்சியில் அரங்கநாதர் கோவில் உள்ளது. கோவில் உண்ணாழியில் அரங்கநாதர் உருவம் ஏதும் இல்லை. இக்கோயில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப் பெற்றதாகும். இங்கு ஒரு மண்டபமும் உள்ளது.

வேணுகோபாலசாமி கோவில்

தொகு

உட்கோட்டையின் மேற்குப்பக்க நுழைவாயிலின் அருகில் வேணுகோபாலசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு பலகைக் கல்லில் சிற்பங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. இங்கு குழல் ஊதும் கிருஷ்ணன், ருக்மணி, சத்திய பாமாவுடன் இரண்டு பெண் உருவங்களும் புடைச் சிற்ப வாpசையில் வடிக்கப் பெற்றுள்ளன. இந்தக் கோயிலைப் பற்றி கி.பி.1599ல் செஞ்சிக்கு வந்த தந்தை பிமெந்தா என்ற ஜேசுயித் பயணி தன்னுடைய குறிப்பில் குறிப்பிடுகின்றார்.

பட்டாபி இராமசாமி கோயில்

தொகு

இக்கோயிலும் வெங்கடரமணசாமி கோயிலைப் போன்று. கட்டடக் கலையில் சிறப்புற்று விளங்குகிறது. இதிலுள்ள 12 தூண்களுடன் கூடிய மண்டபம் சிறப்புடையதாகும். கி.பி.1858இல் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியர் இந்த மண்டபத் தூண்களைச் சென்னைக்கு எடுத்துச் சென்று ஜெனரல் நெயில் என்பவருடைய சிலைக்கு அடிப்பீடம் அமைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி ஆணையிட்டுள்ளார் என்று தெரிகிறது.

வெளி இணைப்புகள்

தொகு

http://dspace.wbpublibnet.gov.in:8080/jspui/bitstream/10689/12483/24/Vol5_Chapter17-19_1104-1160p.pdf

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gingee Venkataramana Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. 1.0 1.1 C.S, Srinivasachari (1943). History Of Gingee And Its Rulers.
  2. "Venkataramana Temple Gingee". பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.
  3. Michell, George (1995). Architecture and Art of Southern India, Volume 1. Cambridge University Press. pp. 84–86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521441102.