செட்டிகள்ளி ரோசரி தேவாலயம்
செட்டிகள்ளி தேவாலயம் (Shettihalli Rosary Church) என்பது கர்நாடகாவின் செட்டிகள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில்Shettihalli உள்ளது. இது 1860ஆம் ஆண்டு பிரஞ்சு மிஷனரிகளால், கோத்திக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.[1] 1960களில் ஹேமாவதி அணை கட்டிய பிறகு இத்தேவாலயம் கைவிடப்பட்டது.[2] பருவமழை காலங்களில் நீரில் பாதி மூழ்கிக் காணப்படும் இத்தேவாலயத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் இது மூழ்கிய தேவாலயம் அல்லது மிதக்கும் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.[2]
காண உகந்த காலம்
தொகுஇந்த தேவாலயத்தின் முழு அழகைக் காண வருடத்தில் இரு முறை பயணிக்க வேண்டி உள்ளது. ஜூலை முதல் அக்டோபர் மாதத்தில் நீரில் பாதி மூழ்கி காட்சியளிக்கிறது. டிசம்பர் முதல் மே வரை நீர் வடிந்து முழுத்தோற்றம் காட்சி அளிக்கிறது.
பயண வழி
தொகுசாலை வழி: பெங்களூருவில் இருந்து 200 கிமீ தொலைவில் செட்டிகள்ளி உள்ளது. இரயில் வழி : யஷ்வந்பூரிலிருந்து கர்நாடகாவின் காசனுக்கு இரயில் செல்கிறது. காசனில் இருந்து செட்டிகள்ளி 40 கி.மீ தொலைவில் உள்ளது.