ஹேமாவதி ஆறு

ஹேமாவதி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது 245 கிமீ நீளமுடையது. இது கர்நாடகத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி ஹாசன் மற்றும் மைசூர் மாவட்டங்களில் பாய்ந்து கிருஷ்ணராஜ சாகர் நீர்த் தேக்கத்தில் காவிரியுடன் கலக்கிறது. ஹாசன் மாவட்டத்திலுள்ள கோரூர் என்னுமிடத்தில் இதன் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமாவதி_ஆறு&oldid=2223406" இருந்து மீள்விக்கப்பட்டது