செட்டியாபத்து

செட்டியாபத்து (CHETTIYAPATHU) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம், செட்டியாபத்து ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இந்த ஊர் ஐந்துவீட்டு சுவாமி கோயிலால் புகழ்பெற்றது. இவ்வூர் திருச்செந்தூருக்கு தென்கிழக்கே 19 கிலோ மீட்டர் தொலைவிலும், உடன்குடியிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]இந்த ஊர் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுபின் படி, 1114 குடும்பங்கள் கொண்ட செட்டியாபத்து கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 4,479 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.38% ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1017 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.38% ஆகவுள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 566 மற்றும் 12 உள்ளனர்.[2]

அருகமைந்த ஊர்களும் கிராமங்களும்

தொகு
  1. திருச்செந்தூர் - 18 கிலோ மீட்டர்
  2. உடன்குடி - 2 கிலோ மீட்டர்
  3. ஆண்டிவிளை
  4. அருணாச்சலபுரம்
  5. கொட்டான்காடு
  6. குமாரலெட்சுமிபுரம்
  7. முத்துகிருஷ்ணாபுரம்
  8. சிவலூர்
  9. பண்டாரபுரம்
  10. இராமசந்திராபுரம்
  11. தேரியூர் (கிழக்கு)
  12. தேரியூர் (மேற்கு)
  13. வாத்தியார் குடியிருப்பு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டியாபத்து&oldid=3282855" இலிருந்து மீள்விக்கப்பட்டது